பக்கம்:தமிழர் மதம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

$02 தமிழர் மதம் இங்கனம் சிவ மெய்ப் பொருள் ஐந்தும், அறிவ மெய்ப் பொருள் ஏழும், எல்லா மதங்கட்கும் பொதுவான ஆத மெய்ப் பொருள் இருபத்து நான் கொடு கூடி, மெய்ப் பொருள் மொத்தம் முப்பத்தா றென்றும், இது சிவனியக் கொண் முடிபுச் சிறப்பென் றும்; தமிழரை மயக்கி, உயர்ந்த அறிவியற் கல்வியும் ஆராய்ச் சிப் பட்டம் பெற்றவரும் குருட்டுத் தனமாக நம்பி உருப் போட் டுக் கிளிப் பிள்ளைப் பாடமாக ஒப்பிக்குமாறு செய்து விட்டனர் ஆரியர். இலங்கம் (லிங்கம்), மங்கை பங்கன், விடையேறி, நடவரசன், அந்தணன் அல்லது குரவன் என்னும் ஐந்தே தமிழர் வழிபாட்டு வடிவம் என்பது, முன்னரே கூறப்பட்டது. சிவ மெய்ப் பொருள் ஐந்தும் தூய மாயையில் தோன்றின வென்பது, எல்லாவற்றையுங் கடந்து நிற்கும் இறைவனை ஐங் கூறிட்டதொடு, அவனை மாயையி னின்று படைத்தது மாகின்றது. ஆண் பெண் பான்மையின்றி ஒரே தன்மையாய் ஆற்றல் வடிவா யுள்ள இறைவனை, பொதுமக்கட்கு அம்மையப்பனாகக் கூறிய அணி வகையை அறியாது, மாந்தரைப் போன்ற கண வனும் மனைவியுமாகக் காட்டி, தலையுங் காலு மில்லாத பல்வேறு கதைகளைக் கட்டி, சொல்லளவாகவுள்ள சிவன் சிலைக்கு ஆண்டு தொறும் திருமணம் நடத்தி வைப்பது, எத்துணைத் துணிச்சலான தெய்வப் பழிப்புச் செயல்! மாயை என்று ஒரு தனிப் பொருளில்லை. நாற் பூதமும் வெளி யில் அணுக்களாக மறைந்து நிற்பதே மாயை. மாய்தல் மறை தல். மாய்-மாயை. ஒ. நோ: சாய்-சாயை- நிழல். மண்ணி னின்றே குடமும் மரத்தினின்றே பெட்டியும் ஆதல் போல், அழிப்புக் காலத்தில் அணுக்களாக ஒடுங்கி நின்ற நிலம் நீர் தீ வளி என்னும் நாற் பூதங்களே, படைப்புக் காலத்தில் மீண்டும் திரண்டு தோன்றும். இடம் (வெளி), காலம், இறைவன் என்னும் மூன்றும், வேறு ஒன்றினின்றும் தோன்றது என்றும் ஒரே தன்மையாய் நிற்கும் நித்தப் பொருள்களாம். காலம் கருத்துப் பொருளே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/118&oldid=1429698" இலிருந்து மீள்விக்கப்பட்டது