பக்கம்:தமிழர் மதம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க0ம். இடை நிலை பியல் நில்- நிற்றம்- நித்தம்-வ. நித்ய, நித்தம் - நித்தல். ஒ. நோ: வெல்-வெற்றம், கொல்-கொற்றம். குற்று-குத்து, முற்றகம்-முத்தகம். இடம் உண்மையின் (இருத்தலின்) தொடர்ச்சியே காலம். அது ஒரே தன்மையது. அழியும் பொருள்களை நோக்கியே இறப்பு நிகழ் வெதிர்வு.என்றும், கதிரவன் திங்கள் தோற்ற மறைவும் தட்ப வெப்ப நிலை வேறுபாடும் பற்றியே சிறு பொழுதும் பெரும் பொழுதுமாகவும், அது பகுக்கப்படும். எதிர் வெல்லாம் நிகழ்வாகிப் பின்பு இறப்பாகி விடும். கால் போல் நீண்டு செல்வது காலம். கால்-காலை. கால்காலம்-வ. கால். "காலம் உலகம் உயிரே உடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம் ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன - ஆவயின் வருஉங் கிளவி யெல்லாம் பால் பிரிந் திசையா வுயர் தினை மேன.” என்னும் தொல்காப்பிய நூற்பாவை (ருசக) நோக்குக. உலவுதல் - வளை தல், சுற்றுதல், திரிதல், உருளுதல். உலவு-உலகு-உலகம்-வ. லோக. உலகு = உருண்டையா யிருப்பது, சுற்றுவது, வினை, அறிவு, விருப்பம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பன ஆதனோடு கூடிய அகக் கரணங்களும் புறக் கரணங்களுமான ஆத மெய்ப் பொருள்களாதலால், கலை, அறிவம் (வித்தை ), விழைவு (அராகம்) என்னும் அறிவ மெய்ப் பொருள்கள் உண் டென்பது மிகைப்படக் கூறலாம். ஆகவே, முற் கூறிய -இருபத் தெண் மெய்ப் பொருள்களே உண்மையானவை என அறிக. சித்தம்; குணம், முதனிலை (பிரகிருதி), மான் என்பன ஒரு பொருட் சொற்கள். திரவிட நாகரிகத்தை ஆரிய மாகக் காட்டுவதற்கு, பொருட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/119&oldid=1429699" இலிருந்து மீள்விக்கப்பட்டது