பக்கம்:தமிழர் மதம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இடை நிலை யியல் காரு மேலெழுத்துப் போல் மறையும். அவற்றைக் குறிக்கும் வரிவடிவு களே, அவை எழுதப்பட்ட பொருள்கள் உள்ளவரை கட்புலனாக திற்கும். நாடாப் பதிவானிற் பதியப்பட்ட பேச்சும் பாட்டுமான ஒலி களும், அவை தோன்றிய வுடனேயே மறையும். எல்லா வொலிகளும், கருத்தறிவிக்கும் குறிகளான சொல் லும் சொல்லுறுப்புமாகப் பயன்படா. மாந்தன் வாயிற் பலுக்க (உச்சரிக்கக் கூடிய ஒலிகளே சொற்களாம். ஒரு வகுப்பார் அல்லது இனத்தார் வழங்கும் சொற் றொகுதியே மொழியாம். மொழியில்லாமற் பறவையும் விலங்கும் போல் ஒரு சில வொலிகளைக் கொண்டே, முந்தியல் மாந்தர் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தனர். முதற் காலத்திற் சொற்களாகவே மொழியொலிகள் தோன் றின. நாகரிக மாந்தன் மொழியறிவு பெற்ற பின்பே, சொற்களை எழுத் தொலிகளாகப் பகுத்தான். ஓரெழுத் தொலியாகவும் பல வெழுத் தொலியாகவும் சொற்கள் இரு வகையாய் அமையும். பல எழுத்தொலிகள் மக்களெல்லார்க்கும் பொது வாயினும் , மாந்தனின வளர்ச்சிக் காலம், தட்ப வெப்ப நிலை முதலியவற் றின் வேறுபாட்டால், பல இனத்தார் மொழிகளிற் சிலவும் பலவு மான சிறப் பெழுத்தொலிகளும் அமைந்துள்ளன. தமிழர் குமரிநாட்டில் தோன்றிய முந்திய இனத்தாராத லின், அவர் மொழி வில் முப்பதொலிகளே அமைத்துள்ளன. அவை பெரும்பாலும் மிக எளியன. ஆரியர், அவருள்ளும் வேத ஆரியர், மிக மிகப் பிந்திய வராதலின், அவர் மொழியில் இக ஒலிகள் அமைந்துள்ளன. அவற்றுட் பல ஒலித்தற்கு அரியன; சில செயற்கையானவை. சிவனிய மெய்ப் பொருளியலில் எழுத்து டுக என்று கூறி 'யிருப்பது, சமற்கிருதம் நோக்கியே யாம். அது தமிழர் மொழி யன்று. கோலெழுத்துக் காலத்திலும் வட்டெழுத்துக் காலத்திலும் தமிழிலும் டுக எழுத்திருந்தன என்று கூறுவது, வரலாற்றறிவும் மொழி நூலறிவும் அறவும் இன்மையையே காட்டும். கோவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/121&oldid=1429701" இலிருந்து மீள்விக்கப்பட்டது