பக்கம்:தமிழர் மதம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காசு தமிழர் மதம் களில் டூக விளக்கேற்றி எழுத்தாலத்தி (அக்கராலத்தி) எடுப் பதும், ஆரிய மொழி யமைப்புப் பற்றியே. எழுத் தொலி அல்லது மொழியொலி மூச்சுக் காற்றாகிய உயிர்ப்பு வளியாற் பிறக்குமே யன்றி, ஆரியர் கூறியது போல் உதானன் என்னும் உந்தி வளியாற் பிறவாது. காட்சியும் கருத்தும் ஆகிய இருவகைப் பொருள்களும்தோன்றிய பின்னரே, அவற்றைக் குறிக்கும் சொற்கள் மாந்த னால் அமைக்கப்பட்டன. பொருள் தோன்றிய போதே சொல் லும் உடன் தோன்றிற் றென்றும், சொல் இயற்கையாகப் பொரு ரூணர்த்து மென்றும், இடுகுறியாகவும் சொற்கள் இருக்கு மென் றும், வடமொழி தேவமொழி யென்றும், அது வேறெம் மொழி யினின்றும் கடன் கொள்ளாதென்றும், உண்மைக்கும் மொழி நூற்கும் மாறான பல அறியாமையும் ஏமாற்றும் ஒருங்கே கலந்த கூற்றுக்கள், தமிழுக்கும் தமிழனுக்கும் ஓரளவு கற்க வே முடிந்தன, "அகார முதலாக ஐம்பத்தொன் முகி (திருமந். உசுரு), (ஓதும் 'எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும் ஆதி யெழுத்தவை ஐம்பத்தோ டொன்றென்பர்) (ஷை கசஉ), (அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றயதே (ஷ கசக), ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும் ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும் ஐம்ப தெழுத்தேயும் ஆவ தறிந்தபின் ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.) (ஷை கூசச), என்று திருமூலர் திருமந்திரத்தினின்று மேற்கோள் காட்டிப் பயனில்லை. இதற்கு விடை திருவைந்தெழுத்து விளக்கத் திலேயே கூறப்பட்டு விட்டது. " ஐம்பத்தோ டொன்றென்பர்.) என்று பிறர் கூற்றாகக் கூறியதும் இங்குக் கூர்ந்து தோக்கத் தக்கது. உலகனைத்துந் தழுவிய வரலாறும் மொழி நூலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/122&oldid=1429702" இலிருந்து மீள்விக்கப்பட்டது