பக்கம்:தமிழர் மதம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ககஉ தமிழர் மதம் படைக்கப்பட்டன வென்னும் பொய்யான செய்தியை, அவன் சொல்லி யிருக்க முடியாது; சொல்லி யிருப்பின், இறைவனின் தோற்றரவாக இருந்திருக்க முடியாது. ஆகவே, ஆரிய தால் வரண ஏற்பாட்டை நிலை நிறுத்த வேணவாக் கொண்ட பிற்காலத்துப் பிராமண னொருவன் கட்டிய செய்தியே, வியாச பாரதப் பகுதியாக இடைச் செருகப் பட்ட தென வுணர்க. இளங்கோ வடிகளும் திருமூலரும் போன்ற துறவியர்க் குரிய அந்தணன், ஐயன், முனிவன் என்னும் பெயர்கள் மட்டுமன்றி, தெய்வத்திற்கே யுரிய பகவன் என்னும் பெயரும், பிராமணர்க்கு வழங்கி வந்திருப்பது, அவர்க்கு ஏற்பட்ட குல வுயர்த்தத்தைக் காட்டும். துறவு நிலையில் எல்லாரும் சமமேனும், இன்றும் சங்க ராச்சாரியாரைப் பெருமிதத்தொடு நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து வணங்கும் மன்னரும் வெள்ளையரும், தமிழ மடத் தலை வரை அங்கனம் வணங்குவ தில்லை. எந்தான வாழ்வு மூவேந்தராலும், பிராமணர் கூட்டங் கூட்டமாகச் சதுர் வேதி மங்கலம் என்னும் புதிய குடியிருப்புக்களிற் குடியேற்றப் பட்டனர். அது அகர மேற்றுதல் எனப்பட்டது. அதைத் திரு மூலரும், "அகரம் ஆயிரம் ஆரியர்க் கீயிலென் சிகரம் ஆயிரம் செய்து முடிக்கிலேன் பகரும் ஞானி பகலூண் பலத்துக்கு நிகரிலை யென்பது நிச்சயந் தானே, 23 (திருமந். கஅடிச்), "ஆறிடும் வேள்வி அவிகொளும் தூலவர் கூறிடும் விப்பிரர் கோடிபே குண்பதில் நீறிடுத் தொண்டர் நினைவின் பயனிலை பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.' (கஅஉரு), என்று கண்டித்தார்.* அகரம் மருத நிலத்தூர், ஆகையால், சதுர்வேதி மங்கலம் நல் வயல்களோடு கூடியது. * இங்குக் காட்டப் பட்டுள்ள திருமந்திரச் செய்யுட்கன் சை, சி. நா. ப: க. பதிப்பு, வே. விசுவநாதம் பிள்ளை பதிப்பில், இரிடத் தும் அந்தணர் என்னும் சொல்லே உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/128&oldid=1429708" இலிருந்து மீள்விக்கப்பட்டது