பக்கம்:தமிழர் மதம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க20 தமிழர் மதம் அப்பர் சுந்தரர் தேவாரப் பாடல்களையும், நோக்கின், சம்பந்தன் தன்னைப் பாடினான் சுந்தரன் பொன்னைப் பாடினான் என்னப்பன் என்னைப் பாடினான்.” என்று இறைவன் கூற்றாகக் கூறும் மக்கள் சொலவடை ஓரளவு பொருத்த முள்ள தாகவே தோன்றுகின்றது. சம்பந்தர் வேதத்தையும் வேதியரையும் வேள்வியையும் பலவிடத்தும் பாராட்டிப் போற்றி யிருப்பதை நோக்குமிடத்து, அவர் சிவ நெறியை மட்டுமன்றி வேத நெறியையுங் காக்கவே, சமண மதத்தைப் பாண்டி நாட்டில் தொலைத்தார் என்று கருத நேர்கின்றது. மரைக் காட்டில், திருநாவுக்கரசர் பாடிய பதிக இறுதியில் கதவு திறந்ததும், சம்பந்தர் பாடிய பதிகத் தொடக்கத்திலேயே கதவு சாத்திக் கொண்டதும், திருவீழி மிழலையிற் சம்பந்தர் படிக் காசு வட்டங் கொடுத்தும் நாவுக்கரசர் படிக்காசு வட்டங் கொடாதும் மாற்றப் பட்டதன் விளைவான பிராமணச் சூழ்ச்சி போலும்! மறைக்காடு என்னும் பெயரே, அவ் வூர்ப் பிராமணப் பூசகரின் புரட்டை விளக்கப் போதிய சான்றம். முத் தொழிற் சிவனை அழிப்புத் திருமேனி யாகவும், முத் தொழின் மாயக் காப்புத் திருமேனி யாகவும், ஆரியர் வகுத்த தனாலும் மாலியம் தமிழகத்தில் வர வர வளர்ந்து வந்திருக் கின்றது என்னலாம். இராமாயண பாரதக் கதைகளும் இதற்குப் பெரிதும் துணை செய்திருக்கின்றன, மாலியரான தொல்காப்பியர், சேயோனும் குறிஞ்சியும் முத லாகச் சொல்ல வேண்டிய தினை கன், கி.மு. எ-ஆம் நூற்றாண்டி லேயே மாயோனும் முல்லையும் முதலாகச் சொல்லி விட்டார். தமிழச் சிறு பிள்ளை கட் கெல்லாம், கடைக்கழகக் காலத்திற்கு முன் பிருந்தே, மத வேறுபாடின்றி ஐம்படைத் தாலி காப்பணி யாக அணியப்பட்டு வந்திருக்கின்றது. நம்மாழ்வார் காலத்திற்குப் பின் நெடுங் கணக்கு அரிச்சுவடி என்று பெயர் பெற்று விட்டது. இடைக் காலத்தில், 'அரி ஓம் நம'என்று தொடங்கி எழுத்தறிவிக்கப் பட்டதாகத் தெரிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/136&oldid=1429667" இலிருந்து மீள்விக்கப்பட்டது