பக்கம்:தமிழர் மதம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

III. நிகழ்நிலை யியல் இக்காலத்தில், சமணம் புத்தம் ஆகிய வடநாட்டு மதங்களைத் தழுவிய ஒரு சிலரும், கிறித்தவம் இசலாம் ஆகிய மேனாட்டு மதங்களைத் தழுவிய பெருங் கூட்டத்தாரும், தமிழருள் உள்ளனர். க. திருநான் மறை ஆராய்ச்சி சிவனியம் மாலியம் என்னும் இரு தமிழ் மதங்களினின்றும் ஆரியக் கூறுகளை நீக்கும் முயற்சி, திருவள்ளுவர் காலத்தினின்று தொடர்ந்து வருகின்றது. பல்லவபுரம் தவத் திரு. மறைமலையடிகள், திருவாசகப் போற்றித் திரு வகவலுக்குத் தாங்கள் வரைந்த விரிவுரையில், "மூவா நான் மறை முதல்வா போற்றி' என்னும் அடியிலுள்ள "மூவா நான்மறை' என்னுந் தொடர்ச் சொல், தொல்காப்பி யம், இறையனாரகப் பொருள், திருக்குறள், தேவாரம், சிவ ஞான போதம் என்னும் நூல்களைக் குறிக்குமென்றும், வடமொழி நான்கு வேதங்களைக் குறிக்காதென்றும், கூறினார்கள். அதைத் திருச்சி மா. சாம்பசிவப் பிள்ளை எதிர்த்து ஒரு மறுப்புரை வெனி யிட்டார். அதன்பின், பேரா. கா. சுப்பிரமணியப் பிள்ளை செந்தமிழ்ச் செல்வி முதற் சிலம்பில், " திரு நான்மறை விளக்கம்' என்னும் தலைப்பில், நான் மறை என்பன தமிழ் நூல்களே யென்று ஒரு தொடர் கட்டுரை வெளியீடு வித்தார். அதன் கருத்து: சிவபெருமான், நம் தமிழ் நாட்டில், ஒரு கல்லால மரத்தின் கீழ்த் தமிழ் மக்கள் நால்வர்க்கு அறம் பொருளின் பம் வீடென்னும் உறுதிப் பொருள் நான்கினையும் உணர்த்தினார். அத் தமிழறிஞர், திருக்குறள் போன்ற நான் மறை நூல்களையும், அவற்றிற்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/137&oldid=1429669" இலிருந்து மீள்விக்கப்பட்டது