பக்கம்:தமிழர் மதம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழர் மதம் துணையாக அறுவகை உறுப்பு நூல்களையும், இயற்றினர். அவை தலைக்கழகக் காலத்துக் கடல் கோளில், கழக நூல்களுடன் அழிந்து போயின. நம் சிவனியக் குரவர் கருத்தும் இதுவே. - என்பதேயாம். இதையும் சாம்பசிவப் பிள்ளை மறுத்து, ' திரு நான்மறை விளக்க ஆராய்ச்சி' என்னும் உன் பக்க' எதிர் நூலொன்று வெளியிட்டார். அந்நூற்கு, அவர் கருத்திற்கிணங்கிப் பல பிரா மண அறிஞரும், நெல்லைச் சிதம்பர ராமலிங்கம் பிள்ளை, தச்ச நல்லூர் இலக்குமணப் போற்றி ஐயா, அம்பாசமுத்திரம் காந்தி மதி நாதப் பிள்ளை , திருச்சி ஆ. சுப்பிரமணியப் பிள்ளை, உறந்தைப் புலவர் பெரியசாமிப் பிள்ளை, கோவை (C. K.) சுப் பிரமணிய முதலியார், தஞ்சை அராவ ஆண்டகை (ராவ் பஹ தூர்) (K.B.) சீநிவாசப் பிள்ளை, சீகாழிப் புலவர் முத்துத் தாண் 'டவராயப் பிள்ளை , உயிர் நூலாசிரியர் ப. மு. சோமசுந்தரம் பிள்ளை , ச, சதாசிவ முதலியார், யாழ்ப்பாணம் சிவபாதசுந்தரம் பிள்ளை, கைலாச பிள்ளை, வைத்திய லிங்கம் பிள்ளை, அருளம் பலம், ஆறுமுகம் பிள்ளை, கணேச பண்டிதர், சுவாமிநாத பண் டி.தர் ஆகிய தமிழ் அறிஞரும், நன்மதிப்புரையும் பாராட்டுரை யும் வழங்கியுள்ளனர். நால்வேதம் அல்லது நான்மறை, ஆறங்கம், ஆகமம் என் பன ஆரிய நூல்களே என்பதும், திருக்குறள் தவிர இது போதுள்ள மற்றைப் பண்டை நூல்களிலெல்லாம் அந்தணர் என் பது பிராமணரையே குறிக்கும் என்பதும், சரியே. ஆயின், ஆரி யச் சார்பான இற்றைப் பண்டை நூல்க ளெல்லாம், ஆசியர் தென்னாடு வந்து தம்மை நிலத் தேவரென்றும் தம் மொழியைத் தேவ மொழி யென்றும் சொல்லி ஏமாற்றி, தம் மேம்பாட்டை நாட்டி மதத்தையும் வரலாற்றையும் திரித்த பின்னரே இயற்றப் பட்டவை யாதலால், அவற்றை முதனூல்களென மயங்கி, அவற்றிற்குமுன் தமிழ் நூல்கள் இருந்ததில்லை யென்று கொள் வது, வரலாற்றறிவும் மொழி யாராய்ச்சியும் இன்மையால் நேர்ந்த விளை வாம். இவ் விரண்டும் போதிய அளவு இன்மை யாலேயே, ஆரிய ஏமாற்றையும் அதனால் தமிழர் அடைந்து வரும் பெருங் கேட்டையும் கண்ட அடிகளும் பேராசிரியரும், இன நல நன்னோக்கமாகவே, நான் மறை தமிழர்க் குரியவை யல்ல வென்றும், இறந்து பட்ட தமிழ் நூல்க ளென்றும், கூறலா யினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/138&oldid=1429670" இலிருந்து மீள்விக்கப்பட்டது