பக்கம்:தமிழர் மதம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிகழ் நிலை யியல் திருமந்திரம் ஆரியம் தமிழகத்தில் வேரூன்றிய சு-ஆம் நூற்றாண்டு நூலா தலால், F மாரியுங் கோடையும் வார்பனி தூங்க நின் றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து வாரிய முந்தமி ழும்முட னே சொல்லிக் காரிகை யார்க்குங் கருணை செய் தானே.” "அவிழ்க்கின்ற வாறும் அது கிட்டு மாறும் சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் லெனுமிவ் விரண்டும் உணர்த்து மவனே புணரலு மாமே.” “அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர் செந்தழ லோம்பிமுப் போது நியமஞ்செய் தந்தவ நற்கரு மத்து நின் றாங்கிட்டுச் சந்தியு மோதிச் சடங்கறுப் பார்கனே. 3 பெருநெறி யான பிரணவ மோர்ந்து குருநெறி யாலுரை கூடி நால் வேதத் திருநெறி யான திருகை யிருத்திச் சொரூபம தானோர் துகளில் பார்ப் பாரே.33 என்பவற்றைக் கணேச பண்டிதரும், சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம் உவமா மகேச ருருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மிற்றம் பெற்ற நவவா கமமெங்கள் நந்திபெற் றானே. என்பதைச் சுவாமி நாத பண்டி தரும், திருவாசகம் தேவாரம் முதலிய பிற பனுவற் செய்யுட்களைப் பிறரும், தம் கொள்கைக்குச் சான்று காட்டிப் பயனில்லை. மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்' என்று சிறப்புப் பாயிரம் கூறுவதால், திருமந்திர மண்டிலங்கள் (விருத்தங்கள்) மொத்தம் மூவாயிரமே. வே. விசுவநாதப் பிள்ளை பதிப்பில் க.சேஎ மந்திரங்கள் உள்ளன. 'சை. சி. தூ. ப. கழகப் பதிப்பில் மூவாயிரமே உள்ளன. அவற்றுள், "அவிழ்க்கின்ற வாறும்', "அந்தண ராவோர், என்னுமிரண்டும் இடம் பெறவில்லை . அவை இடைச் செருகல் போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/139&oldid=1429671" இலிருந்து மீள்விக்கப்பட்டது