பக்கம்:தமிழர் மதம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழர் மதம் “வடமொழியைப் பாணினிக்கு வகுத் தருளி யதற்கிணையாத் தொடர்புடைய தென் மொழியை யுலகமெலாந் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர் ....... " இருமொழிக்குங் கண்ணு தலார் முதற்குரவர் .............. " என்னும் சிவஞான முனிவர் கூற்றுக்கள் இக்காலத்திற் கேற்கா, வடமொழிக்கு மூலம் தென் மொழி யென்பதை, இந்நூலின் முடி புரை யியலில், 'எது தேவமொழி?' என்னும் பகுதியிற் காண்க. (மன்னு மாமலை மகேத்திர மதனிற் . சொன்ன வாகமத் தோற்றுவித் தருளியும்” என்று பாடினார், கி. பி. மூன்றாம் நூற்றாண்டிறு தியிற் பாண்டி நாட்டிற் பிறந்து வளர்ந்து, தமிழை முற்றக் கற்று, வரகுண பாண்டியனின் தலைமை மந்திரியாரா யிருந்து, சிறந்த சிவ னடியாராக மாறிய மாணிக்க வாசகர். மகேந்திரமலை தெற்கே மூழ்கிப் போன குமரிமலைத் தொட ரின் வடபகுதி யென்பது, துங்கமலி பொதித்தென்பாற் றொடர்ந்தவடி வாரத்தின் அங்கனக இலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம். என்னும் சிவ தருமோத்திர (கோபுர. சீஅ) அடிகளால் அறியப் படும். மிகவும் உயர்ந் திருக்கிற பொதிய மலைக்குத் தெற்காகிய மயேந்திரகிரியின் அடிவாரத்தில், அழகிய பொன் மய மாகிய இலங்கை யென்னுந் தேசமும் பொருந்தும்.” என்னும் அவ்வடி களின் உரையை நோக்குக. கி. பி. உ-ஆம் நூற்றாண்டிடை வரை இருந்ததாகத் தெரி கின்ற குமரியாறு, மகேந்திரம் என வடவர் வழங்கும் குமரிமலைப் பகுதியி னின்றே எழுந்தோடி, இலங்கைத் தீவு பிரியாது பெரு நிலத்தோடு சேர்ந்திருந்த காலத்தில், அதனூடு பாய்த்து கடலிற் கலந்திருத்தல் வேண்டும். குமரி யாற்றின் ஒரு பகுதி ஓடிக் கொண்டிருந்த காலத் தன்னாட்டிற்கு வந்து விட்டாரேனும், மகேந்திரம் என்னும் குமரிமலையிற் சிவ பெருமானிடம் அல்லது அவரருள் பெற்ற நந்தி போன்ற குரவனிடம், கொள்கை மறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/140&oldid=1429672" இலிருந்து மீள்விக்கப்பட்டது