பக்கம்:தமிழர் மதம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழர் மதம் ஆகமம் என்னும் வடசொற்குத் தோன்றியது என்றே பொருள் , தோன்றற் புணர்ச்சியை வடமொழியாளர் ஆகம சந்தி என்று கூறுதல் காண்க. குறியீட்டு முறையில் ஆகமத்தைத் தோன்றியம்' என்னலாம். தோன்றியது என்னும் பொருளா லேயே, ஆகமங்கள் வட நாட்டு ஆரியர் தென்னாடு வந்தபின் புதிதாகத் தோன்றியவை என்பதை, ஆகமம் என்னுஞ் சொல் உணர்த்துதல் காண்க. இனி, ஆகமம் என்னும் வடசொல்லும் தென்சொல் அடி வேரினின்றே தோன்றிய தென்பதை, கீழ் வருஞ் சொல் வர லாற்றால் தேர்ந்து தெளிக. உய்தல் = செல்லுதல். உய்த்த ல் = செலுத்துதல், உய்இய்-இய-இயவு-(க) செலவு. "இடைநெறிக் கிடந்த இய வுக்கொண் மருங்கில் (சிலப். கக:கசுஅ). (உ.) வழி. "இய விடை வருவோன்') (மணி. கல:கசு). இய-இயல், இயலுதல் - (க) செல்லுதல். (உ) நடத்தல். " அரிவை யொடு மென்மெல வியலி” (ஐங். காடு. (க) கூடிய தாதல், இயவு- இயவுள் =(க) வழி. (உ) நடத்துவோன், தலைவன், இறைவன். பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்” ( திரு முரு. உ எச). இயவு - (இயகு) - இயங்கு. இயங்குதல் = செல்லுதல். இயங்கு-இயக்கு-இயக்கம் = செலவு. இய்-எய்-எய்து. எய்துதல் = நடத்தல், நிகழ்தல், சென் நடைதல், அடைதல். எய்-ஏ. ஏதல் - போதல். இவ் வினை இன்று வழக்கற்றது. ஏ-ஏவு. ஏவுதல் = செலுத்துதல், தூண்டுதல், தூண்டிக் - கட்டளை யிடுதல். ஏ-ஏவு-ஏகு. ஏகுதல் = போதல். ஒ. நோ: போ-போவு--போகு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/142&oldid=1429642" இலிருந்து மீள்விக்கப்பட்டது