பக்கம்:தமிழர் மதம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிகழ் நிலை யியல் கஉஎ ஏ-யா-யாத்திரை செலவு. தகடூர் யாத்திரை- தகடூர்ச் செலவு, ஓ. நோ: மா-மாத்திரை, மாத்தல் - அளத்தல், இதுவும் ஒரு வழக்கற்ற வினை. ஏகாரம் யாவாகத் திரிதலை, ஏன்-யான், ஏ-யா, ஏதுயாது, ஏனை-யானை, ஏமை-யாமை, ஏமம்-யாமம்-சாமம் முதலிய சொற்றிரிபுகளான் அறிக. யா-ஜா (மராட்டி, குசராத்தி, இந்தி, வங்கம்.) யாத்திரை-யாத்ரா--ஜாத்ரா. மராட்டியும் குசராத்தியும் பழம் பஞ்ச திரவிடம்; இந்தியும் வங்கமும் வட திரவிடமாகிய முன் வடமொழி (பிராகிருதம்). ய-ஐ, போலித் திரிபு: எ-டு: யோகி (வ.)-ஜோகி (இ.), யுவன் (வ.)-ஜவான் (இ.), யௌவனம்(வ.)-juvenis 1. ஜா-gi. OE, OS. gin, OHG. gan, gen, E. go, Skt. gd (to go), gātu (going). சகரம் ககரமாகத் திரிதலால், ஜகரம் ககரத்தின் எடுப் பொலியாக 'g' என்று திரியும். வட திரவிட வழிப்பட்ட இந்தியிலேயே, போதலைக் குறிக் கும் வினைச் சொல்லின் ஜகரம், இறந்த காலத்திற் ககர எடுப் பொலி (g) ஆகி விடுகின்றது. ஜா - போ, ஜாத்தா ஹை= போகின்றான், ஜாவேகா (jivega) = போவான். கயா (gaya) = போனான். வடமொழி என்னும் சமற் கிருதத்தில், என்னும் முதனிலை ga என்று குறுகியும் gam என்று திரிந்தும், gati, gama, gamana என்னும் வினைப் பெயர்களைப் பிறப்பிக்கும். கம் (gam) என்னும் முதனில் 'ஆ' என்னும் எதிர்மறை முன்னொட்டொடு சேர்ந்து, செல்கைக்கு எதிரான வருகையைக் குறிக்கும் ஆகம் (Igama) என்னும் வினைப் பெயரையும் வினை யாகு பெயரையும் தோற்றுவிக்கும். ஆகம் என்னும் வடசொல், தமிழில் ஆகமம் என்று மகரமெய்யீறு கொடுத்துக் குறிக்கப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/143&oldid=1429643" இலிருந்து மீள்விக்கப்பட்டது