பக்கம்:தமிழர் மதம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க. அ தமிழர் மதம் 'ஆ' என்னும் எதிர்மறை முன்னொட்டு, அகர எதிர்மறை முன்னொட்டின் நீட்டமே. அல்-அ-ஆ. ஓ. நோ : நல்-ந. இங்ஙனம், ஆகார எதிர்மறை முன்னொட்டுச் சேர்க்கை யால் எதிர்வினைச் சொற்களைப் படைப்பது, சமற்கிருத இயல்பே. கம் - போ. ஆகம் = வா, தா = கொடு. ஆதா= கொள், வாங்கு. சமற்கிருதம், தன்னில் ஐந்திலிரு பகுதியை முழுச்சொற் கடனாகவும், வேறோர் ஐந்திலிரு பகுதியை வேர்ச்சொற் கடனாக வும், த IN னின்று கொண்டுள்ள தென்பதை, 'எது தேவ மொழி?' என்னும் பகுதியிற் காண்க. - திரு நான்மறை விளக்க ஆராய்ச்சி'க்கு மதிப்புரை வழங் கியவருள் ஒருவரான, தஞ்சைச் சீனிவாசப் பிள்ளை, (ஸ்ரீமான் கா. சுப்பிரமணிய பிள்ளை யவர்கள், நல்ல குலத் தில் பிறந்தவரா யிருந்தும் இந்த நான் மறை விளக்கம் எழுதி யிருப்பது, கலியுகக் கூத்துக்களில் ஒன்றென்று தோன்றுகிறது. அசஞ்சல சிவ பக்தியில் சிறந்த குடும்பத்தில் தோன்றிய ஸ்ரீமான் சாம்பசிவம் பிள்ளையவர்கள், மேலே கண்ட ஆராய்ச்சி என்னும் நூலை எழுதியிருப்பது, சைவர்கள் அனைவருக்கும் சந்தோஷத் தைக் கொடுக்கக் கூடியது.” என்று வரைந்திருப்பது, ஆரி யர்க்கு அடிமையரா யிருப்பவரே நல்ல குலத்தா ரென்றும் நல்ல, சிவனிய ரென்றும் பொருள் படுவதா யுள்ளது. இதை அவர்தம் தமிழ் வரலாறு' மறு பதிப்பில் வெளியிடாது போயினர். இத்தகைய நல்ல குலத்தாரும் நல்ல சிவனியரும் இருந்த தனால் தான், சின்னமனூர்த் தேவார ஊர்வலம் பிராமணத் தெருவில் தடுக்கப் பட்டதும், அது பற்றித் தொடர்ந்த வழக்கில் பிராமண முறையாளி பிராமணச் சார்பாகத் தீர்ப்புக் கூறியதும், ஆகும். மகேந்திரம்' என்னும் முடியைக் கொண்ட குமரிமலைத் தொடரின் வடபகுதி மூழ்கிய பின்னரே, கஞ்சம் மாவட்டத்திற் சிவன் கோவில் கொண்டுள்ள மலை மகேந்திரம் என்று பெயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/144&oldid=1429644" இலிருந்து மீள்விக்கப்பட்டது