பக்கம்:தமிழர் மதம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிகழ் நிலை யியல் ககூக ஆயினும், நான் கருதியது கைகூடுமா வென்று ஓர் ஐயம் எனக்கிருந்தது. ஏனெனின், அங்கு இராயசம்' என்றிருந்த பிராமண எழுத்தாளர், நான் பண்டாரத் திருமுன்பு செல்லு முன்பே என்னை அழைத்து, தம் அகவைக்கும் அறிவிற்கும் பதவிக்கும் தகாத பல வினாக்கள் வினவினார். நான் தங்கி யிருந்த மடத்து விடுதி மேலாளரும், என்னைப் பண்டாரத் திரு முன்பு அழைத்துச் சென்ற பணியாளரும், மடத்துக்காகக் கணக்கரும் பிராமணரே. அதோடு, பெரும் பேராசிரியர் உ. வே. சாமிநாத ஐயர் அங்கு வந்து தங்கும் தனி மனையை யுங் கண்டேன். அவர் தம்பிரானுக்கு ஆசிரியரா யிருந்தவர் என்றும் கேள்விப்பட்டேன். ஆதலால், வாய்த்தால் தமிழுக்கு ; வாய்க்கா விட்டால் வடமொழிக்கே.' என்று கருதிக் கொண்டு, குருபூசை நாளன்று சென்றேன். பெரும் பேராசிரியரும் வந்திருந்தார். அவரும் தம்பி ரான் அவர்களும் ஒருங்கே நின்ற விடத்துச் சென்று கண்டேன் . " ஐயர் அவர்களைப் பற்றித் தெரியுமா? என்று தம்பிரான் அவர்கள் வினவினார்கள், "தெரியும்.” என்றேன். ஐயரோ, ஒருமுறை நான் அவர் இல்லஞ் சென்று கண்டிருந்தும், தமக்கு நினைவில்லை யென்றார். அவ்வளவு தான். தம்பிரான் அவர்கள் அப்பாற் சென்று விட்டார்கள். நானும் விடுதிக்குத் திரும்பி னேன். எத்தனையேர் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் நூல்களும் வெளி யிட்ட பின்பும், தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தி. மு. க. அரசும், வெவ்வேறு நிலைமையிலுள்ள தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களும், என் ஆராய்ச்சியைப் போற்றாத போது, நிலத்தேவர் காவலிலுள்ள ஒரு நிறுவனம் எங்கனம் போற்றும்! அதை எதிர்பார்ப்பது எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடுவதே. என்னொடு தமிழன்பரான தமிழர் வேறு சிலரும் விடுதித் தாழ்வார அறையில் தங்கி யிருந்தனர். பிராமணர்க்கோ உள் ளிடம். நண்பகலுணவு எங்கட்குப் பிற்பகல் ந. மணிக்குத் தான் வந்தது. கரணியம் வினவிய போது, அன்று தான் பிராமணப் பந்தி முடிந்த தென்று தெரிவிக்கப் பட்டது. எனக்கு மடத்துப் பொருளுதவி தப்பியது பற்றி எள்ளளவும் வருத்தமில்லை. தமிழர் குமுகாய நிலைத் தாழ்வே என்னை மிக மகப் புண் படுத்தியது. நாடு தமிழ் நாடு; மடம் தமிழன் மடம்; மதம் தமிழன் மதம்; பணம் தமிழன் பணம். அங்கன மிருந்தும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/149&oldid=1429649" இலிருந்து மீள்விக்கப்பட்டது