பக்கம்:தமிழர் மதம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழர் மதம் தமிழன் நாய்போல் நடத்தப் படுவது இவ் விருபதாம் நூற்றாண்டி, லும் தொடர்கின்ற தெனின், இற்றைத் தமிழன் உயர் திணை யைச் சேர்ந்தவ னல்லன் என்பது தெள்ளத் தெளிவாம். பிராமணர்க்கு உள்ளும் தமிழர்க்கு வெளியுமாக வெவ்வே றிடத்தில் உண்டி படைக்கப் படினும், ஒரே நேரத்திற் படைக்கப் பட்டிருப்பின் ஓரளவு நன் ரூ யிருந்திருக்கும். அக் காலத்துப் பிரா மணப் பொதுவுண்டிச் சாலகளில், பிராமணரின் எச்சிலைகளி லிருந்து கறிவகைகளை யெடுத்துத் தமிழர்க்குப் படைப்பது வழக்கமா யிருந்தது. காசு கொடுத்துண்ணும் இடத்திலேயே அந்நிலைமை யாயின், இலவசமா யுண்ணும் இடத்தில் எங்கனம் இருந்திருக்கும்! மடம் துறவியர் பயிற்சிக்கு ஏற்பட்டது. கற்பிக்கப் படுவன கொண் முடிபும் மெய்ப் பொருளியலும். முப்பத்தா றென்று கொள் னப்படும் மெய்ப் பொருள்களுள், குலம் எதைச் சார்ந்தது? குலம் மாந்தன் இயல்பாயின், ஏனை நாடுகளில் ஏன் அஃதில்லை? " ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று திருமூலரே சொல்ல வில்லையா? வேதம் ஓதித் திருக் கோவில் வழிபாடு நடத்தும் பிராமணப் பூசகனை ஒருவாறு உயர்வாகக் கருதினாலும், வேத மறியாது உழவு, கைத்தொழில், வணிகம், சமையல், கோழிப் பண்ணை , ஏவல், கணக்கம், ஆசிரியம், ஊர்காவல், ஆள்வினை முதலிய பல தொழில்களைச் செய்யும் பிராமணரையும் ஏன் உயர்வாகக் கருத வேண்டும்? பிராமணர் போலுடுத்துப் பிராமணர் போற் பேசிப் பிராமணராக வாழும் தமிழரும் உண்டே ! நயன்மைக் கட்சி (Justice Party) ஆட்சிக் காலத்தில், அலுவற் பேற்றின் பொருட்டுப் பூணூல் களைந்து தம்மைத் தமிழராகக் காட்டிக் கொண்ட பிராமணரும் உண்டே! தமிழருள்ளும் ஒருவரைக் குலப் பட்டத்தினால் மட்டும், ஒரு குலத்தா ரென்று எங்கனங் கொள்ள வியலும்? முதலியார் குலத்தை எடுத்துக் கொள்ளின், வேளாண் முதலி, செங்குந்த முதலி, அகம் படிய முதலி, கோலிய முதலி, முதலிப் பெண்ணை மணந்ததனால் ஆன முதலி, தானே பட்டஞ் சூட்டிக் கொண்ட முதலி, 'பண்டை அரசியல் அதிகாரிகள் வழிவந்த முதலி எனப் பலவகையுண்டே .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/150&oldid=1429650" இலிருந்து மீள்விக்கப்பட்டது