பக்கம்:தமிழர் மதம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிகழ் நிலை யியல் ககஎ ஆட்சிமொழிக் காவலர் திரு. கீ. இராமலிங்கனார் ஆச்சாரி யார் மடத்திற்குச் சென்று இது பற்றி வினவிய போது, ஆச்சாரி யார் நேரடியாகத் தமிழில் விடை யிறுக்காது, தம் அணுக்கத் தொண்டர் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லுமாறு சமற்கிருதத் திலேயே விடை கூறினாராம். சுவாமிகளுக்கு நன்றாகத் தமிழ் தெரியுமே! தமிழிலேயே எனக்கு நேரடியாய் விடை கூற லாமே!" என்று ஆட்சிமொழிக் காவலர் சொன்ன தற்கு, "சுவாமிகள் பூசை வேளையில் நீச பாஷையில் பேசுவ தில்லை.” என்று அணுக்கத் தொண்டர் மறுமொழி கூறினாராம். எது நீச மொழி என்பதை, “எது தேவ மொழி?' என்னும் பகுதியிற் காண்க. டு. அகோபிலம் சீயர் ஆணவம் முன்பு தருமை வளாகத் தமிழ்க் கல்லூரி முதல்வராக இருந்த வரும், இன்று காஞ்சி ஞானப் பிரகாசர் மடத் தலைவராக இருப்பவரும் ஆன தமிழத் துறவியார், வடார்க்காடு மாவட்ட முக்கூர் என்னும் சிற்றூரில், தம் இல்லத்தையே மடமாக்கிக் கொண்டு ( அகோபிலம் சீயர்' என இறுமாந்திருக்கும் பிராமண ரைப் பார்க்கச் சென்றிருந்த போது, அப் பிராமணர் "நீ ஒரு சூத்திரன். உனக்குக் காவி கட்ட அதிகாரம் உண்டா ? வேகம் படிக்க அதிகாரம் உண்டா ?' என்றும் பிறவாறும் திமிரொடு வினவி யிருக்கின்றார். சு. தவத்திருக் குன்றக்குடி அடிகளின் சிவ தமிழ்த் தொண்டு ஐங் கோவில் வருமானமே யுடையவரேனும், ஆண்டு முழு தும் நாடெங்கும் சுற்றி, மொழித் துறையிலும் மதத் துறையிலும் கற்றார்க்கும் கல்லார்க்கும் நல்லறிவு புகட்டி, ஆரியத் தீங்குகளே அறவே அகற்றி, தமிழர் திருந்திய முறையில் வாழவும் தெய்வத் தமிழில் வழிபடவும், அல்லும் பகலும் அரும் பாடுபட்டு, ஆயிரக் கணக்கான வேலி நிலங்களை யுடைய ஏனை மடங்களின் தலைவ ரினும் சிறந்த பணியாற்றி வரும், தவத்திருக் குன்றக்குடி அடிக ளின் தவப் பெருஞ் சிவ தமிழ்த் தொண்டு போற்றிப் புகழத் தக்கதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/153&oldid=1429654" இலிருந்து மீள்விக்கப்பட்டது