பக்கம்:தமிழர் மதம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க அ தமிழர் மதம் எ. தி. மு. க. அரசின் திருக் கோவில் தொண்டு நம்பா மதத்தாரென்று தமிழ்ப் பகைவராலும் அவரடியாரா லும் பழிக்கப்பட்ட தி. மு. க. அரசினர், பழங் கோவில்களைப் புதுக்கியும், திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தியும், வருமானத் தைப் பெருக்கியும், தமிழ ரெல்லாரும் நெஞ்சுருகி உண்மையாக வழிபடத் தாய்மொழியில் வழிபாடு செய்வித்தும், மாந்த ரெல்லா ரும் இறைவன் மக்களென்று உணர்ந்து, ஏமாற்றும் ஏற்றத் தாழ்வும் இனப் பகையு மின்றி, எல்லாரும் உடன் பிறப்புப் போல் ஒருமித்து 'இன்புற்று வாழ, கோவிற் பூசகரை எல்லா வகுப்பி னின்றும் தெரித் தெடுக்கத் திட்டமிட்டும்; இதுவரை வேறெவ் வரசும் செய்யாத முறையில், சிறந்த இறையடியார் போல் உண்மையான மதத் தொண்டு செய்து வருவது, எதிர் காலத் தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு நற்குறியாகும். ஆயினும், தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்னும் உண்மையை நாட்டினா லன்றி, இவ் வேற் பாடு நிலைத்த பயன் தராது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/154&oldid=1429655" இலிருந்து மீள்விக்கப்பட்டது