பக்கம்:தமிழர் மதம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வரு நிலை யியல் கசிக படும். ஆயின், பால் முழுக்கு, நெய்யாட்டுப் போன்றவை ஒருவர்க்கும் பயன் படா, இறைவனுக்கும் ஏற்காது. மக்கட் டொகைப் பெருக்கமும் வேலை யில்லாத் திண்டாட்டமும் பொருள் விலை யுயர்வும் வறுமையும் வறட்சியும் மிக்க இக்காலத்தில், ஏழை மக்கள் குடிக்கக் கூழுமின்றிப் பசியும் பட்டினியுமாய்க் கிடந்து வருந்துகையிலும், தற்கொலை செய்து வருகையிலும், உயிரற்ற ஓருருவத்தின் மேற் குடங் குடமாய்ப் பாலைக் கொட்டு பவன், இறைவன் அடியான் என்னாது கொடியான் என்றே கருதுவன், இறைவனுக்கு எண்ணில்லா எல்லா வுலகும் என்றும் சொந்தம். அவனுக்கு ஒரு பொருளும் தேவையில்லை. அவனே எல்லார்க்கும் எல்லாவற்றையும் அளிப்பவன். அவன் விரும்பு வது மனம் ஒன்றே. அதை முழுமையும் அளிக்க முடியா தவர், பூசகர்க்கும் ஏழைகட்கும் பல்வகைப் பணி செய்யும் பொது மக் கட்கும் பயன்படுமாறு, தத் தமக்கு இயன்றவளவு பல்வகைப் பொருள்களைக் காணிக்கையாகப் படைக்கலாம். ச. உருவிலா வழிபாடு துறவறத்தார்க்கு மட்டுமன்றி, அறிவு விளக்கம் பெற்ற இல் லறத்தார்க்கும் உருவிலா வழிபாடே உகந்ததாம். உருவ வழி பாட்டினால், இறைவனின் எங்கும் நிறைந்த தன்மை உணரப் * படாது போம். அதோடு, அவனது அளவிடப்படாத பெருமைக் கும் அது இழுக்காகும். உலகிலுள்ள உயிரினங்களுள் உயர்ந்த து மாந்தனினம். ஆதலால், தவசிறந்த வகையிலும், மாந்தன் வடிவில் தான் இறைவனைக் காட்ட முடியும். அதுவே அவன் மாட்சிமைக்கு இழுக்கா யிருக்க, பகுத்தறி வில்லா யானை வடிவிற் படிவ மமைத்து வணங்குவது எத்துணைப் பழிப்பாகும்! ஒருவர் படத் தைத் தவறாக வரையின், அவருக்கு எத்துணைச் சினம் எழுகின் றது! மாந்தனுக்கே அங்ஙனமாயின் இறைவனுக்கு எங்கன மிருக்கும்! கசினி மகமது கற் படிமைகளை யுடைத்துப் பொற் படிமை களை உருக்குவான்; சண்பகக் கண் நம்பி செப்புப் படிமையைத் திருடிக் காடு மேடாய் இழுத்துச் சென்று விற்பான், படிமை ஒன்றுஞ் செய்யாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/157&oldid=1429658" இலிருந்து மீள்விக்கப்பட்டது