பக்கம்:தமிழர் மதம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கச தமிழர் மதம் விள்ளுவமோ சீராசை வீடுவிட்டுக் காடு தனில் நள்ளிருளிற் செண்பகக்கண் நம்பியான்-மெள்ளவே ஆடெடுக்குங் கள் வரைப்போ லஞ்சா தெமைக்கரிசற் காடுதொறு மேயிழுத்தக் கால். ஒருவனது தெய்வப் படிமையே அவன் வீட்டுப் படிக்கல் லாக வந்து அமையினும் அமையலாம். இல்லற 'மக்கட்கு உருவ வழிபாடு இன்றியமையாத தென் பர் சிலர். கிறித்தவரும் மகமதியரும் உருவில 1 வழிபாட்டிற் சிறந்து விளங்குதல் காண்க. துறவறம் உயர்ந்த அறிவு தெறியாதலால் பட்டினத்தாரும் தாயுமான வரும் போன்ற உண்மைத் துறவிய ரெல்லாம், உருவ வழிபாட்டை அறியாமைச் செயலாகவே கருதினர். இறைவனுக்கு தெஞ்சக் கோயிலே இனிய தென்று திருவள் ரூவரும் திருமூலரும் கண்ட னர். ( மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். (குறன், க). “உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே யுத்தமன் கோயில்கொண் டானென் அடம்பினை யானிருந் தோம்புகின் றேனே." (திருமந். எ0ரு). படமாடக் கோயில் பகவற்கொன் றீயில் நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில் படமாடக் கோயில் பகவற்க தாமே. (ஷக அஉக). மதத்தை யொழித்து விட்டாற் பிராமணியம் அடியோ டொழியு மென்று கருதி, கடவுளில்லை யென்று சிலர் சொல்லி வருகின்றனர். உருவ வணக்கத்தை ஒழித்து விட்டாலே பிராம ணியம் ஒழிந்து போமென்று உறுதியாய்ச் சொல்லலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/158&oldid=1429659" இலிருந்து மீள்விக்கப்பட்டது