பக்கம்:தமிழர் மதம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கருசு தமிழர் மதம் வேதப் பெயர்கள் வேத மொழியிலும் சமற்கிருதத்திலும் நூற்றுக் கணக்கும் ஆயிரக் கணக்குமான தமிழ்ச் சொற்கள் இருப்பதுடன், வேதத் தின் பெயர்களும் தென் சொல் திரியாகவே உள்ளன. விழித்தல் - கண் திறத்தல், பார்த்த விழி - அறிவு, ஓதி (ஞானம்). ல், அறிதல். (விழக் கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்”(திருமந்.). விழி-L. vide, OS. wit, Goth, wit, ON. vit, Skt. வித்-வேத அறிவு, அறிவு நூல், மறை. செவியுறுதல் - கேட்டல். செவியுறு-ச்ரு-ச்ருதி-கேள்வி, எழு தாக் கிளவியாய்க் கேட்டறியப் பட்ட ஆரிய மறை. வேதப் பிரிவின் பெயரான மண்டலம் என்பதும் தென் சொல்லே. மண்டுதல் - வளைதல். மண்டு- மண்டி. மண்டி யிடுதல் = காலை வளைத்து நிற்றல் அல்லது இருத்தல், மண்டு-மண்டலம் - வட்டம், நாட்டு வட்டம், கால வட்டம், வட்டமான பொருள், நூற் பிரிவு. மண்டலம்-மண்டிலம். என் வடமொழி வரலாறு' பார்க்க. "மூன் றன் பகுதியும் மண்டிலத் தருமையும் (தொல். அகத். சக). தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் என்பன தொன்மையான நாட்டுப் பெயர்கள், மண்டலம்-மண்டலி. மண்டலித்தல் = வட்டமிடுதல், பாட் டின் எல்லா அடிகளும் அளவொத் திருத்தல். "மண்டிலம் குட்டம் என்றிவை யிரண்டும் (தொல். செய். ககசு). வட்டமிடும் அல்லது வட்டமாயிருக்கும், பாம்பு, நச்சுப் பூச்சி முதலிய உயிரிகளும், நரப்பிசைக் கருவிகளும், மண்டலம் அல்லது மண்டலி எனப் பெயர் பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/172&oldid=1429434" இலிருந்து மீள்விக்கப்பட்டது