பக்கம்:தமிழர் மதம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிபுரை யியல் கருடு பமுது, கறியமுது, தயிரமுது, இலையமுது என்பன உண்ணுங் கறிவகைகளைக் குறிக்கும் கல் வெட்டுச் சொற்கள், அமுது செய்தல் = உண்ணுதல் . அமுது படைத்தல் - உணவு பரிமாறுதல், திருவமுது = தெய்வப் படிமைக்குப் படைக்கப்படும் உணவு. அமிழ்து-அமிழ்தம். அமுது-அமுதம். கட்டிப் பொருளாயினும், நீர்ப் பொருளாயினும், உண்ணப் படுவ தெல்லாம் அமுதமாம். உணவிற்குச் சுவையூட்டும் உப்பும் அமுதம் எனப்பட்டது. அமுது = க. சோறு. .. உணவு, 'வாடா மலரும் நல் லமுதும்” (ஞானவா. பிரகலா. அ.). ... பால். (அக. நி.). 5. நீர், (பிங்.). - அமுதம் = க. சோறு. (பிங்.). 2. பால். (பிங்.). கூ.. நீர். “துலங்கிய வமுதம் (கல்லா . ரு). உண்டவன் வாழ்வான் ; உண்ணாதவன் சாவான். சோறும் தீரும் சாவைத் தவிர்ப்பதால் இரு மருந்தெனப்படும். தயிர் அமுதம் எனப்படுவதால் வெண்ணெயும் அமுதமாம். தேவர் மக்களினும் உயர்ந்தவராதலால், அவருணவு சிறந்த தாகக் கருதப்பட்டது. "ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோ ரமுதம் புரையுமால் எமக்கென (தொல். கற். ஈ). அமுதம் என்னுஞ் சொல் வடமொழியில் அம்ருத என்று திரி யும். அதை அ+ம்ருத் என்று பிரித்துச் சாவைத் தவிர்ப்பது என்று பொருள் கொண்டு, அதற் கேற்பத் தேவரும் அசுரரும் கூடித் திருப்பாற் கடல் கடைந்து வெண்ணெ யெடுத்ததாகக் கதை கட்டி விட்டனர். அக்கதையிற் பகுத்தறிவிற் கொவ்வாத பல செய்திக ளிருத்தல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/171&oldid=1429433" இலிருந்து மீள்விக்கப்பட்டது