பக்கம்:தமிழர் மதம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழர் மதம் கல்லால மர நீழலிற் சிவபெருமானிடம் பாடங் கேட்ட ஆரிய முனிவர் பெயராகச் சொல்லப்படும் சனகர், சனந்தனர், சனாதரர், சனற் குமாரர் என்பனவும் இத்தகையனவே. இங்கனம், சமற்கிருதத்தில் ஐத்தி லிரு பகுதி முழுத் தமிழ்ச் சொல்;ஐந்தி லிரு பகுதி தமிழ் வேரி னின்று திரிந்த திரி சொல்; ஐந்தி லொரு பகுதி இடுகுறிச் சொல். பெரும் பேராசிரியர் உ. வே. சாமிநாதையர், தாம் வரைந்த குறுந்தொகை யுரையுள், நூலாராய்ச்சி என்னுத் தலைப்பின் கீழ், சச சொற்களை வடசொல்லாகக் காட்டி, முதலியன' என்னுஞ் சொல்லால் முடித்து, " இவற்றிற் சிலவற்றைத் தமிழெனவே கொள்வாரும் உளர். ” என்று எழுதி யிருக்கின்றார். அவற்றுள், அகில், அமயம், அமிழ்தம், அரசன், அவை, ஆரியர், உலகம், ஏமம், கடிகை, 'கலாவம், காமம், காலம், குணன், குவளை, சகடம், சூலி, சேமம், சேரி, தண்டு, தாது, தூது, தெய்வம், நகர், நீலம், பக்கம், பணிலம், பருவம், பவ ழம், மண்டிலம், மணி, மதம், மதி, மாலை, முகம், முத்து, முரசு, யாமம் என்னும் முப்பத்தேழும் தென் சொல்லாம். சாமிநாதையர்க்குத் தமிழ் தவிர வேறொரு மொழியும் தெரி யாது. அவர் தமிழாலேயே வளர்ந்து தமிழாலேயே வாழ்ந்த வர். ஆயினும், பிறப்பிலேயே அமைந்த ஆரிய நச்சுத் தன்மை அவரை விடவில்லை. பணிலம் என்னும் சொல் வடமொழி அகர முதலிகளில் இல்லை. தென்சொல்லை வடசொல்லாகக் காட்டு வதில் தலை சிறந்த சென்னைப் ப. க. க. தமிழ் அகரமுதலியும், அச் சொல்லை வடசொல்லாகக் குறிக்கவில்லை அங்கன மிருத்தும், சாமிநாதையர் அதை எங்கனம் வடசொல்லாகக் கண்டா ரென்று தெரியவில்லை. அவர் தமிழுக்கு மாபெருந்தொண்டு செய்தார் என்பது உண்மையே. ஆயின், அவர் முன்னோரான பிராமணர் தமிழுக்கு மாறாகச் செய்த வழுவாயின் ஆயிரத்தி லொரு கூற்றிற்குக் கூட, அது கழுவாயாக வில்லை யென்பதை அறிதல் வேண்டும். அவி-அவிழ் - சோற்றுப் பருக்கை, சோறு. அவிழ்அவிழ்து-அமிழ்து-அமிது-அமுது - சோறு, உணவு, பருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/170&oldid=1429640" இலிருந்து மீள்விக்கப்பட்டது