பக்கம்:தமிழர் மதம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிபுரை சியல் கரு புகு-பொகு-பொகில் - அரும்பு: பொகில்--போகில் - அரும்பு. புகு-போ--போத்து = புதிதாய் வெடிக்கும் சிறு கிளை, பூ-பூது-பதம் தோன்றிய ஐம்பூதங்களுள் ஒன்று. (any of the five elements) -பூ-bhi. இதினின்று தான் புவனம், புவி, பூதி, பூமி, பவம், பவனம், பவித்ரம், பவிஷ்யம், பாவம், பாவகம், பாவி, பாவனை, பாவிகம், அபாவம், அனுபவம், அனுபவி, அனுபதி, உத்பவம், சம்பு, தத்பவம், ப்ரபு, ப்ரபாவம், பரிபவம், ஸம்பவம், ஸம்பா விதம், ஸம்பாவனை, சுயம்பூ முதலிய நூற்றுக் கணக்கான சொற்கள் பிறக்கும். தமிழர்க்கு எளிதாய் விளங்குமாறு இவை இங்கு இயன்றவரை தமிழெழுத்தில் எழுதப் பட்டுள்ளன. சில தென் சொற்கள், திரிந்தும் முன்னொட்டுப் பெற்றும் உரு மாறி வடசொற்களாகி யுள்ளன. எ-டு: ஆயிரம்-அஸ்ரம்-அஸ்ர- ஸகஸ்ர. சில தென் சொற்கள் மேலை யாரிய வழியாகத் திரிந்து, நம்ப முடியா அளவு சமற்கிருதத்தில் முற்றும் வடிவு மாறியுள்ளன. எ-டு: காண்-Teut. kun, ken, con, can, can, know, I. gno, GK. gno, Skt. jii. (ஜ்ஞா). காட்சி (அறிவு) - ஜ்ஞான. சில - தென் சொற்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்து அமைத்துள்ளனர். எ-டு: விலங்கு-த்ரியச், அங்குற்றைதத்ரபவத். சமற்கிருதம் இலக்கிய மொழியும் செயற்கை மொழியுமாத லால், பல பொருள் கட்கும் பொருட் பாகுபாடுகட்கும் விருப்பம் போல் இடுகுறிச் சொற்களைப் படைத்துள்ளனர். எ-டு: எழு முகில் (ஸப்த மேகம்): சம்வர்த்த ம், ஆவர்த்த ம், புட்கலா வர்த்தம், சங்காரித்தம், துரோணம், காள முகி, நீலவர்ணம் என்பன. சங்கராபரணம், நாத நாமக் கிரியை முதலிய நூற்றுக் கணக் கான பண்னுப் பெயர்களும் இடுகுறிச் சொற்களே .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/169&oldid=1429639" இலிருந்து மீள்விக்கப்பட்டது