பக்கம்:தமிழர் மதம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கரு உ தமிழர் மதம் சாயுங் காலம் = பொழுது சாயும் எற்பாடு. பொழுது சாய வத் தான் என்னும் வழக்கை நோக்குக. சாயுங் காலம்-சாயங் காலம்--சாய்ங் காலம் (கொச்சைத் திரிபு) - வடமொழியாளர் சாயங் காலம் என்பதைச் சாயம்+காலம் எனத் தவறாகப் பிரித்து, சாயம் என்பதை எற்பாட்டின் பெயரா கக் கொண்டு, அதை வடமொழியில் ஸாயம் என்று குறித்துள் எனர். சாய்-சாயை சாயும் நிழல், நிழல் சாய்கிறது என்பது வழக்கு. சாயை-ச. சாயா (chaya). நிழல் வடிவத்தையும் நிறத்தையும் குறிக்குமாதலால், சாயல், சாயம் முதலிய சொற் களும் தோன்றி யுள்ளன, சாய்-சாய் படுத்தவன், பள்ளி கொண்டான், சேஷ சாயி - அரவணைத் துயின்றேன். தலை சாய்த்தல் என்னும் வழக்கை நோக்குக. சாய்- சயனம் - படுக்கை . சாய்-சா. விழுதலும் படுத்தலும் இறத்தலையுங் குறிக்கும். சா--சாவு-சவம். ஆள் சாய்ந்து விட்டான் என்னும் வழக்கை நோக்குக. சில தென்சொற்களி னின்று, ஒத்த பொருட் கரணியமுள்ள வேறொரு சொல்லையும் படைத் திருக்கின்றனர் வடமொழியாளர். எ-டு : சுள்-சுர்-சுரம் - கடும் பாலை நிலம். சுரம்-ஜ்வர= சுடும் காய்ச்சல் நோய். சில தென் சொல் முதனிலைகளினின்று, ஏராளமான புதுச் சொற்களைத் தோற்றுவித்துச் சமற்கிருதத்தை வளம்படுத்தி யுள்ள னர். எ-டு: பூ (முதனிலை). பூத்தல் - தோன்றுதல், உண்டாதல், இருத்தல். "பூத்தலிற் பூவாமை நன்று" (நீதிநெறி, சு). "பூத்திழி மதமலை (கம்பரா. கும்பகர். பகரு).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/168&oldid=1429638" இலிருந்து மீள்விக்கப்பட்டது