பக்கம்:தமிழர் மதம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிபுரை யியல் கடுக அஸீ என நிற்கும். ஆகவே, தத், த்வம், அஸி என்னும் முச் சொல்லும் சேர்ந்து, நீ அதுவா யிருக்கின்றாய் என்று பொருள் படும் 'தத்த்வமஸி' என்னும் கூற்றியம் அமையும். தத் என்னும் சுட்டுப் பெயரினின்றே தத்வ (தத்துவம்) என்னும் சொல்லும் பிறக்கும். தத்வ - அதாயிருக்கும் தன்மை, உண்மையான தன்மை, உண்மை , மெய்ப் பொருள். வட சொல் என்பதற்கும் சமற்கிருதச் சொல் என்பதற்கும் ஒரு வேற்றுமை யுண்டு. தொன்று தொட்டு வட நாட்டில் தனிச் சிறப்பாக வழங்குஞ் சொல்லெல்லாம் வட சொல்லே. சமற்கிரு தச் சொல் என்பது, வேத ஆரியர் வந்தபின் புதிதாக அமைக் கப்பட்ட ஆரியச் சொல். ஆரியர் வரு முன்பே , வட திரவிடர் (பிராகிருதர்) பல புதுச் சொற்களைப் புனைந்திருந்தனர். அவை யும் வடசொல். ஆகவே, வடசொல் என்னும் பெயர், ஆரிய மல்லாத வட நாட்டுச் சிறப்புச் சொற்கும், சமற்கிருதச் சொற் கும், பொதுவாம். எல்லாச் சமற்கிருதச் சொல்லும் வடசொல் லாகும்; ஆயின், எல்லா வடசொல்லும் சமற்கிருத மாகா. ஆதி என்னும் சொல் வடசொல்லே; சமற்கிருதமன்று. இக் கருத்தில் தான் அது என் 'திருக்குறள் தமிழ் மரபுரை'யில் வட சொல்லென்று குறிக்கப்பட்டுள்ளது. அது கழக இலக்கிய வழக் கில் இல்லை. ஆயினும், உண்டாதல் என்னும் பொருள் கொண்ட ஆதல் வினையினின்று அதைத் திரிப்பர் தமிழன்பர் சிலர். ஆக்குதல் = படைத்தல். அனைத்துலகும் ஆக்குவாய் காப் பாய் அழிப்பாய் (திருவாச. க: ச2). இவ்வாட்சி அவர்க்குத் துணை செய்யலாம். சமற்கிருத இலக்கணம் தமிழிலக்கணத்தைப் பின்பற்றிச் சமற்கிருதத்தில் முதன் முதலாகத் தோன்றிய இலக்கணம் ஐந்திரம். அதன் காலம் தோரா. கி. மு. அ-ஆம் அல்லது ஈ-ஆம் நூற்றண்டாகும். அதன்பின், கி. மு. ச-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது 'அஷ்டாத் யாயீ ' என்னும் பாணினீயம். இரண்டும் எழுத்தும் சொல்லும் ஆகிய இரு கூறுகளையே கொண்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/175&oldid=1429437" இலிருந்து மீள்விக்கப்பட்டது