பக்கம்:தமிழர் மதம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கன்) தமிழர் மதம் எழுத்தின் முறை, பிறப்பு, உயிர்மெய்த் தனி வடிவம், மாத்திரை, கிளவி (பதம்), புணர்ச்சி ஆகியவற்றில், சமற்கிருத இலக்கணம் தமிழையே தழுவியுள்ளது. எழுத்தின் வரி வடிவும், கிரந்தம் நாகரி என்னும் இரு வகையிலும் பெரும்பாலும் தமிழை ஒத்திருப்பது, கூர்ந்து நோக்குவார்க்குப் புலனாகும். - பெயர் வினை இடை. என்னும் தமிழ்ப் பாகுபாட்டையே, சமற்கிருதச் சொல்லி லக்கணமும் தழுவியுள்ளது. வேற்றுமை கள் இலத்தீனில் ஐந்து; கிரேக்கத்தில் ஆறு; சமற்கிருதத்தில் தமிழிற் போல் எட்டு, இதனால், வேற்றுமை யமைப்பில், சமற் கிருதம் தமிழைப் பின் பற்றிய தென்பது வெளிப்படை, சமற்கிருத இலக்கியம் பதினெண் தொன்மங்களும் (புராணங்களும்) இராமாயணம் பாரதம் ஆகிய மற வனப்புக்களும் (இதிகாசங்களும்) தவிர, இசை, நாடகம், கணியம், மருத்துவம் முதலிய பிற கலை யறிவி யல் இலக்கிய மெல்லாம் தமிழ் முதனூல்களின் வழி நூல்களாம். சமற்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டபின், தமிழ் முதனூல்க ளெல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. சமற்கிருதத்திற்கு முந்திய இந்திய ஆரிய இலக்கியம் வேதம் ஒன்றே. வேதத்தைப் பெண்டிரும் சூத்திரரும் ஓதக் கூடா தென் பர். ஆயின், பெண்டிரும் சூத்திரரும் சிலர் வேத மந்திரங் களையே இயற்றி யிருக்கின்றனர். வேதம் இயற்றிய பெண்டிர் புலோமனை மகள் ஷசி காமை 1, சிரத்தை சக்தி , கோரவி அப் பிரீனா ,, வாக்கு அகத்தியர் மனைவி லோபா முத்திரை வேதம் இயற்றிய பழங்குடி மக்கள் அரசர் (சத்திரியர்) : மந்தாத்திரி, ஷிவி, வசுமனான், பிரதர்த் தனன், விஸ்வாமித்திரன், மது சந்தனன் , ரிஷபன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/176&oldid=1429438" இலிருந்து மீள்விக்கப்பட்டது