பக்கம்:தமிழர் மதம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிபுரை வியல் கக்க ரேணு, அம்பரிஷன், பரதன், மேதர நிதி, நாபகன் , இரகுகணன், வக்ஷப் பிரியன், புரூரவன், வேனன், சுதாசன், கிருத சமதன், தேவாபி, சந்தானு முதலி யோர். தொழிலாளர் (சூத்திரர்): கவஷன், ஐலுஷன் முதலியோர். கலப்புக் குலத்தார்: கக்ஷீவது (அங்க நாட்டு அரசனின் புழுக் கச்சி மகன்) போன்ற பலர். இப் பெயர்கள் வருண சிந்தாமணியில் உள்ளவாறே எழுதப் பட்டுள்ளன. ஆரியர் கருத்துப்படி, வட நாட்டு மக்களே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் தால்வகைப் பாகு பாட்டினர்; தென்னாட்டுத் தமிழரும் திரவிடரும் ஆகிய' அந் தணர் அரசர் வணிகர் வேளாளர் அனை வரும் சூத்திரரே. ஆயின், ஆட்சி செய்யும் அரசரைச் சத்திரியர் என்றும், பொருள் கொடுக்கும் வணிகரை வைசியர் என்றும், புகழ்வர். இது அதிகாரமும் பொருளும் செய்யும் வேலை. வேள்வி செய் வித்த பண்டை மூவேந்தரையும், சத்திரியர் என்று புகழ்ந்தே வேள்வி செய்விக்கத் தூண்டினர். வேதத்தின் பின் வேள்வி முறைகண விளக்கும் பிராமணங் களும், ஆரியர் தமிழரொடு தொடர்பு கொண்டபின் உப நிடதங் களும் குல வொழுக்க தூல்களாகிய தரும சாத்திரங்களும் தோன்றின. வேதம் செய்யுள் வடிவான மந்திரங்களைக் கொண்டது. முதன் முதல் தோன்றியது இருக்கு (ருக்) ஒன்றே. வேள்வி செய்தற் குரிய மந்திரங்களை அதினின்று பிரித்துத் தொகுத்தது எசுர் (யஜுர்). வேள்வியிற் பாடக் கூடிய மந்திரங்களைப் பிரித் துத் தொகுத்தது சாமம் (ஸாம). இங்ஙனம் ஒரு வேதம் மூவேதம் (வேதத்ரயீ) ஆயிற்று. அதன் பின் ஆறிலொரு பகுதி இருக்கு வேத மந்திரங்களைக் கொண்டதும், பெரும்பாலும் சாவிப்பு மந்திரங்களாலானதும், உரைநடை கலந்ததுமான, அதர்வனம் (அதர்வன்) தோன்றிற்று. அதன் பின்னரே நான் மறை (சதுர் வேத) என்னும் வழக் கெழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/177&oldid=1429439" இலிருந்து மீள்விக்கப்பட்டது