பக்கம்:தமிழர் மதம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கசுட் தமிழர் மதம் வேதக் காலத்தின் பின், வேத சாத்திரங்களின் பொருளை யும் பயனையும் சிறப்பையும் பெரும்பாலும் உரைநடையில் வினக் கும் உரையாகத் தோன்றியவை பிராமணம். காடுறைவு (வானப் பிரத்த) நிலையிற் பிராமணனுக்குப் பயன்படும் கொண் முடிபு நூல்கள் ஆரணியகம் (ஆரண்யக). துறவு (சந்நியாஸ) நிலையிற் பிராமணனுக்குப் பயன்படும் மெய்ப் பொருள் நூல்கள் உப நிடதம் (உப நிஷத்). உப நிஷத் - உடன் கீழிருக்கை . உப-உடன், 'நி= கீழ், ஸத் (Sad) - இருத்தல். ஆசிரியன் அடி யருகிருந்து அவன் நுவற்சியைக் கேட்டல் என்பதே விளக்கப் பொருள், பரம் பொருளறிவால் அறியாமையை ஓய்த் திருக்கச் செய்கை என் பர் வடமொழியாளர். நன்கு அழித்தற்கு ஸாதனம்' என்பர் பர். (P. S.) சுப்பிரமணிய சாத்திரியார். வேதத் தெய்வியம் பல்தெய்வியமே (Polytheism). பல் லொரு தெய்வியம் (Honotheism) என்று மாக்கசு முல்லரும், ஒரு தெய்வியம் ( Monotheism) என்று மா கடானெலும் (MacDonell) கூறியது தவறாம். ஆரியர் பரம் பொரு ளறிவைத் தமிழ ரிடமே பெற்றனர். பல்சிறு தெய்வ வேள்வி மதத்திற்கும் பரம் பொருட் சமய மதத்திற்கும் மடுவிற்கும் மலை முடிக்கும் உள்ள தொலைவே, ஸத் என்னும் சொல்லும் தென் சொல் திரிபே. குத்து -குந்து . I. Sid, Sed, AS. Sitt, E. Sit, Goth. Sit. ON. Siti, OHG. Sizz, Skt. Sad. கி. பி. டு-ஆம் நூற்றாண்டிற்குப் பின், கோவிலமைப்பு, படிமை யமைப்பு, வழிபடு முறை, பூசகன் தகுதி, கொண் முடிபு முதலிய வற்றைக் கூறும் தொழு மறைகள் தோன்றின. அவற் றுள், சிவனியத்திற் குரியவை தோன்றியம் (ஆகமம்) என்றும், மாலியத்திற் குரியவை தொகுப்பியம் (ஸம்ஹிதை) என்றும், காளியத்திற்கு (சாக்தத்திற்கு) உரியவை பாவகம் (தத்திரம்) என்றும் பெயர் பெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/178&oldid=1429440" இலிருந்து மீள்விக்கப்பட்டது