பக்கம்:தமிழர் மதம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கசு தமிழர் மதம் தென் மொழி வடமொழி (எ) உள்ளது சொல்லும் இல்லது சொல்லி ஏமாற்றும் மெய்ந் நூன் மொழி பொய்த் நூன் மொழி (அ) கடவுள் வழிபாட்டு சிறு தெய்வக் கொலை வேள்வி மொழி மொழி (கூ) இயற்கைப் பான்மொழி செயற்கைப் பான்மொழி (க0) செம்மை வரம்பு மொழி செம்மை வரம்பிலா மொழி (கக) பொருளிலக்கணம் பொருளிலக்கணம் உள்ள மொழி இல்லா மொழி (கஉ )மன்பதை முழுவதை ஓரினத்தையே நாற் பிறவிக் குல யும் ஒன்றுபடுத்தும் மாகப் பிரிக்கும் மொழி மொழி (க)பேச்சு மொழி இலக்கிய மொழி (கச)மக்கள் மொழி யென்று தேவ மொழி யென்று ஏமாற்று ஒப்பு மொழி | மொழி தேவ மொழியின் இயல்புகள் தொன்மை, முன்மை, இயன்மை, வியன்மை, தாய்மை, . தூய்மை, எண்மை, ஒண்மை, இளமை, வளமை, அம்மை, செம்மை, இனிமை, தனிமை, மறைமை, இறைமை என்னும் பதினாறும் தேவ மொழிக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத பண்புகளாம். இப்பதினாறும் உடையது தமிழ் ஒன்றே . வடமொழிக்கு ஓரிரு பண்புகளே உள்ளன. தமிழைப் போற் பிற மொழி கலவாது பேசத் தக்க மொழி உலகில் வேறொன்று மில்லை. ஆரிய மொழிகள் பிற தமிழ்ச் சொற் களை விலக்கினும், கட்டுச் சொற்களை விலக்கவே முடியாது. ஆதலால், அவற்றின் உயிர் வாழ்விற்குத் தமிழ்த் துணை இன்றி யமையா ததாம். ஆகவே, தமிழே தேவ மொழி என்றும், சமற் கிருதம் இழி மொழி (நீச பாஷை) என்றும், தெற்றெனத் தெரிந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/180&oldid=1429442" இலிருந்து மீள்விக்கப்பட்டது