பக்கம்:தமிழர் மதம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிபுரை யியல் கசுடு உ. பிராமணன் நிலத் தேவனா? கதை நீல நரி, தரன் நீலத் தொட்டிக்குள் விழுந்து நீல நிறம் பெற்றதனாலேயே, அரிமாவும் வரிமாவும் கரிமாவும் போன்ற வன்மா விலங்குகளையும் ஏமாற்றி அடக்கி யாண்டது போன்றே, வேதப் பிராமணனும் குளிர் நாட்டு வாழ்க்கையாற் பெற்ற தன் வெண்ணிறத்தைத் துணைக் கொண்டு, தான் நிலத் தேவன் என்று தமிழரையும் திரவிடரையும் ஏமாற்றி அடக்கி யாண்டான். அந் நீல நரியின் ஊளையால் அதன் இனம் அறியப் பட்டது போன்றே, பிராமணனும் ஆரிய மாந்தன் என்பது, மேலையாரியத்திற்கு இனமான அவன் மொழியினால் அறியப் பட்டுள்ளது. உலக வரலாற்றறிவும் மொழியாராய்ச்சியு மில்லா த பண்டைக் காலத்தில், பழங்குடிப் பேதைமையும் மதப் பித்தமும் கொடை மடமுங் கொண்ட மூவேந்தரையும் பல் வகையில் வயப்படுத்தி, அவர் வாயிலாகப் பொது மக்களிடைப் பிராமணியத்தைப் புகுத் தினர் ஆரியர். அந்நிலைமைகள் இன்றின்மையால், அக்காலத்து மூட நம்பிக்கைகட்கும் இன்றிட மில்லை. கடந்த மூவாயிரம் ஆண்டாக, பிராமணர் கல்வீயைத் தம் குலத் தொழிலாகக் கொண்டிருந்ததனால், கல்விக் கேற்ற மனப் பான்மையும் நினைவாற்றலும் அவர்க்கு மிக வளர்ந்து வந்திருக் கின்றன. ஆயினும், இவ் வளர்ச்சி குலவாரி யளவிலேயே யன் றித் தனிப்பட்டவர் அளவில் இல்லை. ஏனெனில், இறைவன் கல்வியை எல்லாக் குலத்தார்க்கும் பொது வுரிமை யாக்கி வைத் திருப்பதொடு, வெவ் வேறு குலத் தனி மக்கட்கே சிறந்த கல்வித் திறமையை அளித்திருக்கின்றான். ஒரே குலத்தார் கல்வியைத் தம் முற்றுரிமையாகக் கொள்வது, இயற்கைக்கும் இறைவன் ஏற்பாட்டிற்கும் மாமுனதே. திருவள்ளுவர் போன்ற அற நூலாசிரியரோ, கம்பரினுஞ் சிறந்த பாவலரோ, பிராமணர்க்குள் இருந்ததில்லை. இக்காலத்தும், வயவர் (Sir) சந்திர சேகர வெங்கட்ட ராமன் போன்றே, கோவைக் கோ. துரைச்சாமி நாயக்கரும் {G. D. Naidu) புதுப் புனை வாற்றலர். முன்னவர் அறிஞர்க்குப் பயன்படும் கருத்தியல் ஆராய்ச்சி மட்டும் செய்தவர்; பின்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/181&oldid=1429423" இலிருந்து மீள்விக்கப்பட்டது