பக்கம்:தமிழர் மதம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிபுரை யியல் ககக எது எங்ஙனமாயினும், பிராமணன் நிலத் தேவனல்லன் என்பதும்; உலகியலிலும் மதவியலிலும் இல்லறத்திலும் துறவறத் திலும், தமிழனுக் கில்லாத ஏற்றம் அவனுக்கு இம்மியும் இல்லை யென்பதும், இதை உணராதவன் எத்துணைக் கற்றவ னேனும் உருவத்தால் மாந்தனும் உள்ளத்தால் அஃறினையுமாவ னென் பாதும்; தெரிதரு தேற்றமாம். ஆரியர் வெண்ணிறம் இன்று பொன்னிறமும் செந்நிறமும் புகர் நிறமும் கரு நிறமுமாக மாறி யுள்ளது. தமிழர் மொழியாராய்ச்சியும் வரலாற்றாராய்ச்சியும் செய்து உண்மை யறிந்து கண் விழித்துக் கொண்டனர். ... பிராமணனுக்கு உரியது எவ்வறம்? அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்த் நன்றி யறிதல், நடுவு நிலைமை, அடக்க முடைமை, ஒழுக்க முடைமை, பிறனில் விழையாமை, பொறை யுடைமை, அழுக் காறாமை, வெஃகாமை, புறங் கூருமை, பயனில சொல்லாமை, தீவினை யச்சம், ஒப்புர வறிதல், இகை என்பன இல்வாழ்க்கை யறங்களாகத் திருக்குறள் மறையிற் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் முதன்மையானது விருந்தோம்பல், "இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள், அக). விருந்தோம்பும் இயல்பும் இகையும் பிராமணனுக் கின்மையால், இல்லறம் அவனுக் குரிய தன்று. பிராமணன் தொழிலாகச் சொல்லப்படும் ஆறனுள், இதல் என்பது ஓதுவித்தலில் அடங்குதலால், உண்மையில் அவன் தொழில் ஐந்தே. அருளுடைமை, புலான் மறுத்தல், தவம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, துறவு, மெய்யுணர்தல், அவா வறுத்தல் என்பன துறவு நெறி யறங்களாகத் திருக்குறள் மறையிற் சொல்லப் பட்டுள்ளன, கொலை வேள்வி செய்தலாலும், துறவு நிலையிலும் அகம் பிரமம்' என்றும் சிவோகம்' என்றும் அகங்கரிப்பதாலும், தமிழ் மதத்தை ஆரிய மத மென்றும் தன்னை நிலத் தேவன் என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/185&oldid=1429427" இலிருந்து மீள்விக்கப்பட்டது