பக்கம்:தமிழர் மதம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காம் தமிழர் மதம் தன் இலக்கிய மொழியைத் தேவ மொழி யென்றும் சொல்லி இந்தியப் பழங்குடி மக்களை ஏமாற்றுவதாலும், பிராமணனுக்குத் துறவறமும் உரியதா காது. ஆகவே, பிராமணனுக்கு நாடும் பேச்சு மொழியும் போன்றே அற வாழ்க்கையும் இல்லையாம். ச'. சிவ மதமும் திருமால் மதமும் தமிழ மதங்களே சிவ மதம் தமிழர் மதம் என்பதற்குச் சான்றுகள் (க) சேயோன் மேய மைவரை யுலகமும்' என்று, முருக வணக்கம் தமிழகத்துக் குறிஞ்சி நிலத்திற் குரியதாகத் தொல்காப்பியத்திற் சொல்லப் பட்டிருத்தல் (அகத். டு). (உ) சிவ பெருமான் வெள்ளிமலை யிருக்கையும், மலைமகள் என் னும் பெயரும், கொன்றை மாலையும் காளை யூர் தியும் சூலப் படையும் அக்க மணியும், குறிஞ்சித் திணைக்குரியன வாதல். (B) தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே, (மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமத் தோற்றுவித் தருளியும்: மந்திர மாமலை மகேந்திர வெற்பன், "பாண்டி நாடே பழம்பதி யாகவும்”, தென்னாடுடைய சிவனே போற்றி யெந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி', என்று மாணிக்க வாசகர் கி. பி. 4-ஆம் நூற்றாண்டிற் -பாடி யிருத்தல். சிவ பெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல் களும், செந்தமிழ்ப் பாண்டி நாட்டுத் தலை நகராகிய மதுரை யில் நிகழ்ந்த மை .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/186&oldid=1429428" இலிருந்து மீள்விக்கப்பட்டது