பக்கம்:தமிழர் மதம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் அகம் தரித்தல் - மனம் மிகுதல், செருக்குதல். அகங்கரி - அகங்காரம். ஒ.நோ: இளக்கரி-இளக்காரம், அதிகரி -அதி காரம். அகங்கரி என்னும் வினைச் சொல் சமற்கிருதத்தில் இல்லை. அதனால், அதை வடசொல்லாகக் காட்டும் தமிழ்ப் பகைவர், அதனை அகங்காரம் என்னும் வினைப் பெயரி னின்றே திரிப்பர். நான் என்னும் தற் சுட்டு வேறு;நான் என்னும் ஆணவம் வேறு. இருவகைப் பொருள் (சித்து x சடம்) கஎஅ செத்தல் - கருதுதல். செ-செத்து-சித்து - கருத்து,அறிவு, அறிவுள்ளது. சித்து--S. cit. ஒ. நோ: செந்தூரம்-சிந்துரம். சட்டம்-உடம்புச் சட்டம் (bodily frarac), உடம்பு. சட்டம்-சடம்=உடம்பு. சடம்-ச: ஜட. ஓ. நோ : பட்டம்-படம் (துணி). சடம் -சடல் --சடலம் - உடம்பு. ஒ. நோ: உடல்-உடலம். சடலம் - சதரம் = உடம்பு (பாண்டி நாட்டு வழக்கு). சதரம் - வ.சரீர. பதி லக்ஷணம்--தலைவன் (இறை) இலக்கணம். தலை வன் = க. முதல்வன். 'நீகயிலாய மென்னும் ம லைத் தலைவா' (திருவாச், கூ: ௪0). உ. கடவுள். "தலைவன் காக் கும் (மணி. உக: கூ௩). சொரூபம் - தன்னியல்பு. தடத்தம் சார்பியல்பு. சொருப சிவன்-பரம சிவன், இயனிலைச் சிவன், தன்னியற் சிவன். தடத்த சிவன் -செயனிலைச் சிவன், சார்பியற் சிவன். சிவ வுருவம் (கூ) : சிவம்-சிவம், சத்தி-ஆற்றல், விந்து- விழியம்,நாதம்-ஓதை,சதாசிவன்-அருளாளன், மகேசுரன்- பேரிறைவன், ருத்திரன்-உருத்திரன், அரி--மால், அயன்- நான்முகன். லயம்-ஓடுக்கம். போகம் - நுகர்வு. அதிகாரம்-அதிகாரம். அருபம்-உருவிலி. ரூபர ரூபம்-உருவ வுருவிலி. ரூபம்- உரு, உருவு, உருவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/194&oldid=1429352" இலிருந்து மீள்விக்கப்பட்டது