பக்கம்:தமிழர் மதம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. முடிபுரை யியல் காஎ கூர்மன்- இமையன், கிருகரன் - எரியன், தேவ தத்தன் - ஆவிரியன், தனஞ்சயன்-உச்சியன். ஆகாயம் - வெளி. இதன் கூறுகள் (க0) : சுத்தி - கன்னி, அலம்புஷா - அலம்புடை, இடை-இடங்கலை, பிங்கலை - வலங்கலை, சுஷ்முனா-சுழிமுனை,காத்தாரி- சங்கினி-ச ங் கன், காந்தாரி, குகு-கரவன், ஜிகுவா-நாவி, புருஷன்-ஆதன்.' கர்மேந்திரிய விஷயம்- கருமப் பொறிப் புலனம். இதன் கூறு கள்(ரு): வசனம்--சொலவு, கமனம்-செலவு, தானம் - தானம் (கொடை), விசர்க்கம் -கழிப்பு, ஆனந்தம் - இன்புறவு. ஞானேந்திரிய விஷயம்- அறிவுப் பொறிப் புலனம். இதன் கூறு கள் (ரு): சத்தம்-ஓசை, பரிசம்-ஊறு, ரூபம்-ஒளி, ரசம் - சுவை, கந்தம் -நாற்றம். அகங்காரம் - ‘நான்' உணர்வு. இதன் கூறுகள் (உ) : தைசதம்- தீயிகம், வைகாரிகம் - வேறுபாட்டியம், பூதாதி- பூதமுதல். அகப்பகை யென்னும் குற்றம் (ரு): காமம் -காமம், குரோதம்- சினம், லோபம் இவறல், மோகம்-மயக்கம், மதம்- செருக்கு. குணம் - குணம் (௩) : சாத்துவிகம் - தேவிகம், இராசதம்- மாந்திகம், தாமதம்-பேயிகம், வாக்குவாய்ச் சொல் (ச). இலை முன்னரே கூறப்பட்டன (பக.க0ச). மமகாரம் ("எனது' உணர்வு) என்பதற்கு எதிரான அஹங் காரம் ('நான்) உணர்வு) என்னும் சமற்கிருதச் சொல் வேறு; செருக்கைக் குறிக்கும் அகங்காரம் என்னும் தமிழ்ச் சொல் வேறு. 'அஹம் ' என்பது தன்மை யொருமைப் பெயர். அகம் என்பது மனத்தின் பெயர். கடு - கடி - கரி. கரித்தல் = மிகுதல், கடுத்தல். உப்புக் கரித் தல் என்னும் வழக்கை நோக்குக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/193&oldid=1429351" இலிருந்து மீள்விக்கப்பட்டது