பக்கம்:தமிழர் மதம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசுத்தி ஆக்ஞை முடிபுரை யியல் நாவடி, பதின றிதழி புருவிடை, இரிதழி கஅக சத்திநிபாதம் - அருள் பதிகை. மல பரிபாகம் - மாசு தேய்நிலை. மந்ததரம் - அதி மந்தம். மந்தம் -மந்தம். தீவிரம்-மும்முரம். தீவிரதரம் - அதி மும்முரம்.பத முத்தி -பத வீடு. அபரமுத்தி- அபர வீடு. பர முத்தி -பர வீடு. அண்டம்-கோளம். மொத்து - மொத்தம் (மொத்தை ) - மத்தம் - மந்தம்= மழுக்கம். தச காரியம் - பதின் கருமம்: தத்துவருபம் --மெய்ப் பொருள் காண்பு. தத்துவ தரிசனம் மெய்ப் பொருள் தெளிவு. தத்துவ சுத்தி - மெய்ப்பொருள் தூய்மை. ஆன் ம ரூபம் - தற்காண்பு. ஆன்ம தரிசனம் -தற்றெளிவு. ஆன்ம சுத்தி - தற்றூய்மை. சிவ ரூபம் - சிவக் காட்சி. சிவ தரிசனம்-சிவத்தெளிவு. சிவயோகம் - சிவ வோகம். சிவபோகம் - சிவ நுகர்வு. பஞ்ச கலை-ஐயருள் நிலை: நிவிர்த்தி கலை - விடுவிப்பு நிலை. பிரதிட்டா கலை -உய்ப்பு நிலை. வித்தியா கலை - அறிவுறுத்த நிலை. சாந்தி கலை - அமைதி யுறுத்த நிலை. சாந்தி யதீத கலை - துன்பொழிப்பு நிலை. அஷ்டமா சித்தி - எண்பெரும் பேறு. அணிமா--நுண்மை. மகிமா - பருமை. கரிமா - கனமை. லகிமா - நொய்ம்மை. பிராப்தி-பேறு (விரும்பியது பெறுகை). பிராகாமியம்- விரும்பியது செய்கை. இசத்துவம்-இறைமை. வசித்துவம் - வயப்படுத்தம். பிற சொற்கள் மாயா-மாயை. சமும் மாயை : சுத்தம்-தூய்மை. பிரகிருதி -முதனிலை, மூலம். அசுத்தம் - தூவின்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/197&oldid=1429356" இலிருந்து மீள்விக்கப்பட்டது