பக்கம்:தமிழர் மதம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் நீரூட்டியும் நீராடுவித்தும் உணவு விளைத்தும் பல்வகை யுத வும் ஆற்றை நன்றியறிவு பற்றி வணங்குவது வேறு; அதற்குத் தனித் தெய்வமுண்டென்று கருதுவது வேறு. (எ) அறிவுவளர்ச்சி 40 மாந்தன் நாகரிகமடைந்து அறிவு வளர்ந்து பண்பாடுற்ற பின், மறுமையும் கடவுளுண்மையுங் கண்டு, பல்வேறு மதங்களை யும் சமயங்களையும் வகுத்தது அறிவு வளர்ச்சியாகும். மக்கள் மனப்பாங்கும் அறி வு நி லை யும் பல்வேறு வகைப் பட்டிருப்பதால், மத சமயங்களும் பல்வேறுாயின. அறிவுவளர்ச்சி யென்னும் பெயருக்கு முரணாக,பல்வேறு மூடப்பழக்கங்களும் கொள்கைகளும் மதங்களிற் கலந்திருப்ப துண்மையே. அவை பெரும்பாலும் பழங்காலத் தன்மையாலும் தன்னலக்காரரின் சூழ்ச்சியாலும் ஏற்பட்டவை. இக்கால அறிவு நிலைக் கேற்ப, அவற்றை இயன்றவரை நீக்கிக் கொள்ளல். வேண்டும். மதமும் சமயமும் பெரும்பாலும் நம்பிக்கையைப் பொறுத்தன. ௪. மூவகை மதம் மக்களின் அறிவுநிலைக் கேற்ப, மதம், (க) சி றுதெய்வ வணக்கம், (உ) பெருந்தேவ மதம், (௩) கடவுள் சமயம் என மூவகைப்படும். இம்மை நலத்தை மட்டும் நோக்கி, இன்பக் காலத்திலும் துன்பக் காலத்திலும், ஐம்பூ தமும் ஆவிகளும் போன்ற சிறுதெய் வங்கட்கு உணவு படைத்துக் காவு கொடுப்பது, சிறுதெய்வ வணக்கம்; சிவன் அல்லது திருமால் என்னும் பெயரால் இறை வனை நாள்தோறும் வழிபட்டு, உயிர்க்கொலை நீக்கிக் காய்கனி மட்டும் படைத்து, அவ்வம்மத அடையாளந் தாங்கி, இருதிணை யுயிருக்கும் தீங்கு செய்யாது இயன்றவரை நன்மையே செய் தொழுகுவது, பெருந்தேவ மதம்; எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உரு வ வணக்கமின்றி உள்ளத்திலேயே வழிபட்டு, தன்னையே படைத்து, முக்கரணமுந் தூய்மையாகி, இல்லறத் திலேனும் துறவறத்திலேனும் நின்று, இயன்றவரை எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/26&oldid=1428874" இலிருந்து மீள்விக்கப்பட்டது