பக்கம்:தமிழர் மதம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை வுயிர்கட்கும் நன்மையே செய்து, இம்மையிலேனும் மறுமை யிலேனும் வீடு பெற வொழுகுவது, கடவுன் சமயமாம். கக சிறு தெய்வ வணக்கத்திற்கு உருவம் இன்றியமையாதது; பெருந்தேவ வழிபாட்டிற்கு, அது வழிபடுவாரின் அகக்கரண வளர்ச்சிக் கேற்றவாறு, இருந்தும் இல்லாமலும் இருக்கலாம். ரு.குமரிநாட்டு மதநிலை மேற்கூறிய மூவகை மதநிலையும், கி. மு. க0,000 ஆண்டு கட்குமுன்பே குமரிநாட்டுத் தமிழ்மக்கள் கொண்டிருந்தனர். ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலம் தோரா. கி. மு.கரு00. அவர்மதம் கொலைவேள்விச் சிறுதெய்வ வணக்கம். தமிழரொடு தொடர்புகொண்ட பின்னரே, சிவ மதத்தையும் திருமால் மதத் தையும் தழுவினர். ஆதலால், அவரின் வேதாகம இதிகாச புராணக் கதைகளையும் புரட்டுக்களையும் நம்பி, அலையே சிவ நெறிக்கும் திருமால்நெறிக்கும் அவற்றின் கொண்முடிபுகட்கும் (சித்தாந்தங்கட்கும்) மூலமெனக் கூறுவது, இவ்விருபதாம் நூற்றாண்டிற்கு எட்டுணையும் ஏற்காது. இதன் விளக்கத்தை இந்நூல் நெடுகலுங் கண்டு தெளிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/27&oldid=1428875" இலிருந்து மீள்விக்கப்பட்டது