பக்கம்:தமிழர் மதம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடு குமரிநிலை யியல் வினைப் பாவை என்னுங் கொள்கை, ஆரியத்தொல்கதை தோன்றிய பிற்காலத்தது. அது கொல்லி யணங்கின் பேரழகை யும் கொல்லுந் திறத்தையும் பற்றிய உயர்வு நவிற்சியே. மக்கள் அவ்விடத்தை யணுகாவாறு எச்சரித்தற்கே, அவ்வணங்கின் படிமை அங்கு வைக்கப் பட்டிருத்தல் வேண்டும். அணங்கை இன்று 'மோகினி' என்னும் வடசொல்லாற் குறிப்பர். மாந்தர்க்கு அறியாமையும் அச்சமும் மிக்கிருந்த முதற் காலத்தில், பேயாட்சியும் மிக்கிருந்தது. அக்காலத்து மதம் பேய் மதமே. பேயாடிகளும் பேயோட்டிகளும் பேய்மந்திரிகரும் பெரு மதிப்புப் பெற்றிருந்தனர். ஒருவரைப் பிடித்த பேயோட்டவும், நோய் நீக்கவும், ஒருவரை நோய்ப்படுத்தவும் வாய்கட்டவும் இயக்கந் தடுக்கவும் விரும்பிய இடத்திற்கு வருவிக்கவும் வசியஞ் செய்யவும் சாவிக்கவும், ஒருவர் மீது பேயேவவும், ஒருவ ருட மையை மறைக்கவும் அழிக்கவும், சண்டையிலும் கலகத்திலும் போரிலும் வெற்றி தரவும், இறந்தோரைப் பேசுவிக்கவும், தம் மால் இயலுமென்று பேய்மந்திரிகர் தருக்கினர். இன்றும், பேயோட்டல் பெருவழக்காகவும், வசியமுஞ் செய் வினையும் அருகிய வழக்காகவும், இருந்து வருகின்றன. குறளி யேவல் சில செய்தித் தாட்களிலும் வெளியிடப்பட்டது. போர் வெற்றிக்கு மந்திரிகரைத் துணைக் கொள்வது, திப்பு சுல்தான் காலம்வரை தொடர்ந்தது. இறந்தான்குறி (Neeromaney) கேட் கும் இடமும் இன்று சிலவுள்ளன. கடைக்கழகக் காலத்தில், பேயனார் என்றொரு புலவரும், பேய்மகள் இளவெயினி என்றொரு புலத்தியாரும், இருந்தனர். பேயாழ்வார், பூதத் தாழ்வார் என்று இறைவனடியார் பெயர் களும் அடுத்து வழங்கின. பேயன், பேய்ச்சி என்னும் இயற் பெயர் தாங்கிய மக்களை, இன்றும் நாட்டுப்புறத்திற் காணலாம். பண்டைக்காலத்திற் பேய்களே பெருவழக்காகப் பொதுமக் களால் வணங்கப்பட்டதனாலும், சில பேய்கள் நன்மையே செய் வனவாக இருந்ததனாலும், பேய்க்கு நாளடைவில் தெய்வம் என்னும் பெயரும் ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/31&oldid=1428881" இலிருந்து மீள்விக்கப்பட்டது