பக்கம்:தமிழர் மதம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் "கானுறை தெய்வம் காதலிற் சென்று நயந்த காதலின் நல்குவன் இவெனென வயந்த மாலை வடிவிற் றோன்றிக் கொடிநடுக் குற்றது போல ஆங்கவன் அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீ ருகுத்து வாச மாலையின் எழுதிய மாற்றம் தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின் கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன் மாதவி மயங்கி வான்துய ரூற்று மேலோ ராயினும் நூலோ ராயினும் பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும் பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும் கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச் செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும் தண்முத் தொருகாழ் தன்கையாற் பரிந்து துனியுற் றென்னையுந் துறந்தன னாதலின் மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது எதிர்வழிப் பட்டோர் எனக்காங் குரைப்பச் சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன் பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென" (சிலப். கக: காக-க்கை). என்பதிற் பேய்மகள்தெய்வம் எனப்பட்டமை காண்க. இனி, பேய்கட்கு எல்லாச் செய்தியும் தெரியு மென்பதும், எவ் வடிவுங் கொள்ள இயலு மென்பதும், பொருத்தமாகப் படைத்து மொழியுந் திறனுண் டென்பதும்,நொய்ய வுடம்பன்றிக் கனவுடம் பும் இரவும் பகலும் எடுக்கவும் கானிலந் தோய நடக்கவும் கூடு மென்பதும், தம் தலைவியாகிய காளிக்குக் கட்டுப்பட்டும் பத் தினிப் பெண்டிர்க்கும் தூய துறவியர்க்கும் அஞ்சியும் ஒழுகும் கடப்பாடுண் டென்பதும், இப்பகுதியால் அறியப்படும். பேய்கள் பட்டப் பகலிலும் கனவுடம்பு கொண்டு பாதம் நிலத்திற் பதிய நடக்குமென்பதை, பழையனூர் நீலி கதையும் மெய்ப்பிக்கும். அல்லாக்கால், வணிகனை மட்டுமன்றி ஊராரையும் ஊர்முதலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/32&oldid=1428883" இலிருந்து மீள்விக்கப்பட்டது