பக்கம்:தமிழர் மதம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் சோழநாடு முதற்காலத்திற் பனிமலை வரை பரவி யிருந்தமை உய்த்துணரப்படும். ஙக அரசர் சிலர் ஒவ்வொரு பூதத்தைத் தமக்குக் காவல் செய்ய அமர்த்தியிருந்தனர். முசுகுந்தச் சோழன் காவற் பூதப் படிமை, புகார் நடுச் சதுக்கத்தில் நிறுத்தப் பட்டிருந்தது. முனியன் என் பது காவற் பூதங்களுள் ஒன்று. எல்லம்மன், எல்லைக் கறுப்பன் என்பன சிற்றூர்க் காவல் தெய்வங்கள். பாராட்டுத் தெய்வம் மதுரை வீரன், மாடன், கறுப்பண்ணன் முதலியவை நடு கல் தெய்வங்கள். கண்ணகி, ஒச்சாண்டம்மை முதலியன பத்தினித் தெய்வங் கள். கருதுகோள் தெய்வம் திரு என்னும் செல்வத்திற்குத் திருமகளும், கல்விக்கு நா மகளும், சாவிற்குக் கூற்றுவனும், தெய்வங்கள். ஞாலம் நாடு மலை ஆறு முதலிய இடங்களைத் தெய்வங்களாக அல்லது தாயராக உருவகித்துக் கொள்வது, கருதுகோள் தெய்வ வணக்கத்தின் பாற் படுவதே. இல்லுறை தெய்வம் குடும்பத் தெய்வமாகவோ தனிப்பட்டவர் தெய்வமாகவோ கருதிக்கொண்டு, இல்லத்தில் உருவம் வைத்து வழிபாடு செய் யும் தெய்வம் இல்லுறை தெய்வமாம். "அணங்குடை நல்லில் (மதுரைக். ருஎஅ). தொழிற்குலத் தெய்வம் பண்டை நில வாணிகர், கோவேறு கழுதைச் சாத்தாக வும் குதிரைச் சாத்தாகவும் நெடுந் தொலைவு சென்று வாணிகம் செய்து வந்ததால், தம் தெய்வத்திற்குச் சாத்தன் என்று பெய ரிட்டதாகத் தெரிகின்றது. அவனுக்கு ஐயனார் என்றும் பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/52&oldid=1428906" இலிருந்து மீள்விக்கப்பட்டது