பக்கம்:தமிழர் மதம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரி நிலை யியல் நெடுஞ்சாலை வழியெல்லாம், ஆங்காங்கு ஊருக்குப் புறம் பாகச் சாத்தன் கோவில் அமைந்திருப்பதால், அவன் புறம்பணை யான் (சிலப்.கூ: கஉ) எனப்பட்டான். அவன் கோவிலில் உள்ள சுடுமண் குதிரைகள், குதிரைச் சாத்தை நினைவுறுத்தும். AST தலைநகர்களிலுள்ள பெருவணிகச் சாத்தினர், விழா நாட் களில் யானை யூர்ந்து செல்வதும் வழக்கமாதலால், சாத்தனுக்கு யானையுங் குதிரையும் ஊர்தியாகச் சொல்லப் பட்டன. "யானை யெருத்தத் தணியிழையார் மேலிரீஇ மாநகர்க் கீந்தார் மணம். 33 (சிலப். க:௪௪). ஒரு சோழன் சாத்தனிடம் செண்டு பெற்றுச் சென்று, பொன் மலையிலுள்ள பெரும்புதையலை எடுத்ததாகக் கூறுங் கதை, வணிகச் சாத்தினரின் பெருஞ் செல்வத்தைக் குறிக்கும். பெருநில முழுதாளும் பெருமகன் றலைவைத்த வொருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான் வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பான் இருநிதிக் கிழவன்........... என்று சிலப்பதிகாரங் கூறுதல் (க:௩க-௩ச) காண்க. வண்ணார் வணங்கும் தெய்வம் மயிலார் எனப்படும். உ. பெருந் தேவ மதம் ஐந்திணைத் தெய்வ வணக்கங்களுள், இரண்டே மதமாக வளர்ச்சி யடைந்தன. சேயோன் வணக்கத்தி னின்று சிவ மத மும், மாயோன் வணக்கத்தினின்று திருமால் மதமும், தோன் றின. விண்ணுலக வேந்தன் கொள்கையின்பின் எங்கும் நிறைந்த இறைவன் கொள்கை ஏற்பட்டபோது, தீயின் கூறா கச் சிவன் என்றும் நீரின் கூறாக மால் (மாயோன்) என்றும், பெயரிட்டு இறைவனை வழிபட்டனர். (க) சிவமதம் இறைவன் பெயர் சேயோன், சிவன் என்னும் இரு சொற்களும், ஒரே மூலத்தி னின்று தோன்றிச் சிவந்தவன் என்னும் பொருளைக் கொண்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/53&oldid=1428907" இலிருந்து மீள்விக்கப்பட்டது