பக்கம்:தமிழர் மதம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச0 தமிழர் மதம் "ேபவமின்மை யிறவின்மை பற்றின்மை பெயரின்மை' உவமை யின்மை யொருவினை யின்மை குறைவிலறி வுடைமை கோத்திர மின்மையென் றிறைவ னிடத்தி லெண்குண மிவையே." என்பது பிங்கலம் (உசு). பவம் (வ.)-பிறப்பு. சிவன் தொழில் படைப்பு காப்பு அழிப்பு என்னும் மூன்று. சிவன் வடிவம் ஐவகை. (க) கொன்றை மாலை யணிந்து சூல மேந்திக் காளை யூர்ந்து செல்லும் செம்மேனியன். (உ) அம்மையப்பன் எல்லா வுயிர்கட்கும் தாய்தந்தை போன்றவன். வலப்புறம் தந்தைக்கூறும் இடப்புறம் தாய்க்கூறும் கொண்டதனால், மங்கை பங்கள் அல்லது மாதொரு பாகன் என்று சொல்லப்படு பவன். தந்தைக்கூற்றுப் பெயர் சிவன் இறைவன் தேவன் பரன் அப்பன் ஐயன் மலைமகன் சூவி தாய்க்கூற்றுப் பெயர் சிவை இறைவி தேவி பரை அம்மை ஐயை மலைமகள் சூலினி மலைமகன் மலைமகள் என்னும் இருபெயரும், மலைவாழ் தெய் வம் என்றே பொருள்படுவன. அம்மையப்பன் வடிவம், இலங்கம் (லிங்கம்) என்னும் உரு வடிவிலும், ஓம் என்னும் ஒலி வடிவிலும், பிள்ளையார் சுழி யென் னும் உகர வரி வடிவிலும், குறிக்கப் பெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/56&oldid=1428911" இலிருந்து மீள்விக்கப்பட்டது