பக்கம்:தமிழர் மதம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலை யியல் இலக்கு - குறி. இலக்கு-இலக்கம்-இலங்கம். அம்மையப்பன் வடிவு, இறைவனின் உண்மை வடிவைக் காண முடியாத இல்லற வாணரான பொது மக்கட்கே. உயர்ந்த அறிவு படைத்தசித்தரும் முனிவரும், இறைவனின் ஆற்றலையே பெண் கூறக உருவகிப்பர். சக இலங்க வடிவு நிலையில், இறைவ னாற்றலைக் குறிக்கும் அடித் தளத்திற்கு ஆவுடையாள் என்றும், மேல் நிற்கும் இலங்கத்திற்கு ஆவுடையப்பன் என்றும், பெயர். ஆவுடையான் என்பது ஆவுடை யம்மை, ஆவுடை யாச்சி என்றும் வழங்கும். (௩) குரவன் தகுதியுள்ளவர்க்கு, அந்தண (அருள் முனிவன்) வடிவில் வந்து உய ரறிவுறுத்தும் பரம ஆசிரியன். முனிவன் கோலத்திற் சடையுடைமையால், சிவன் சடை யன், சடையப்பன் என்றும் பெயர் பெற்றான்.புரம் உயர் நிலைக் கட்டிடம், அஃதுள்ள வூர். புரம் -பரம் - மேலுலகம், வீட்டுலகம். பரம்-பரமன் - மேலோன், இறைவன். பரம்- வரம்-வரன் (குறள். உ௪). (ச) எண் வடிவன் (அட்டமூர்த்தி) நிலம், நீர், தீ, வளி, வெனி, கதிரவன், திங்கள், ஆதன் (ஆன்மா) என்னும் எண் பொருள் வடிவினன். எங்கும் நிறைந்திருப்பது பற்றி எண்டிசையும் சிவனுக்கு எண் கையா கச் சொல்லப்படும். அதனால் எண்டோளன் (பிங்.) என்று பெயர். கதிரவன் திங்கள் தீ என்னும் முச் சுடரும் சிவனுக்கு முக் கண்ணாகக் கூறப்படும். அதனால் அவனுக்கு முக்கண்ணன் என்று ஒரு பெயர். (ரு) நடவரசன் உயிரானது நினைவு சொல்வு செயல் என்னும் முத் தொழிற் படுமாறு, உடம்பின் நடுவுள் தொங்கி நின்று இயங்கும் நெஞ் சத் துடிப்பை நடமாக வுருவகித்து, அது போன்று எல்லா உயிரினங்களும் (படைப்பு காப்பு அழிப்பு என்னும்) தோன் றல் வாழ்தல் மறைதல் ஆகிய முத்தொழிற் படுமாறு, பேருலகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/57&oldid=1428913" இலிருந்து மீள்விக்கப்பட்டது