பக்கம்:தமிழர் மதம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2


language.") என்று கில்பெர்ட்டு சிலேற்றர் கூறிய வுண்மை புலனாகாமற் போகாது.

இவ் வுண்மை சென்ற நூற்றாண்டே வெளிப் பட்டதேனும், இன்னும் வெளியுலகிற் பரவா திருத்தற்குக் கரணியம், தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகத் தமிழ்த் திணைக் களங்களுள், அண்ணா மலை தவிர ஏனை யிரண்டிலும், ஆரியச் சார்பினரும் வணிக நோக்கினருமே தலைமை தாங்குவதும், அவரைத் தமிழ் நாட் டரசுகள் போற்றி வருவதுமே, ஆகும்.

இவ் வகையிற் பேராயத்திற்கும் தி. மு. க. விற்கும் வேற்றுமை யில்லை.

முது பண்டை நூல்க ளெல்லாம் அழியுண் டமையின், இது போதுள்ள பழநூல்களி னின்றே சான்றுகள் எடுத்துக் காட்டப் பட்டுள்ளன.

இந் நூல் வெளியீட்டுத் தொடர்பாக, கோவைத் தாதாபாத் துத் திரு. இராமசாமிக் கவுண்டர் அவர்களின் மகனார் மறை. நித்தலின்பனார் செய்த வுதவி மறக்கற் பாலதன்று.

இந் நூலைச் செவ்வையாக அச்சிட்டுத் தந்த, புன்செய்ப் புளியம்பட்டி மறைமலை அச்சக உரிமையாளர் திரு. ஆடலரச னார்க்கு, தனித் தமிழுலகம் ஆழ்ந்து கடப் பட்டுள்ளது.

இந் நூல் அச்சீட்டு மெய்ப்புத் திருத்தி யுதவிய புலவர் கா. இளமுருகனார் சு. மு., புலவர் ப. கு. முருகவேள், புலவர் ஈ. அருணனார் ஆகியோர்க்கு ஆசிரியன் நன்றி உரித்து.

தேவநேயன். காட்டுப்பாடி விரிவு, உ006, கன்னி, எ (23-9-'72.).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/6&oldid=1448930" இலிருந்து மீள்விக்கப்பட்டது