பக்கம்:தமிழர் மதம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் அஃகு-அக்கு=கூர் அல்லறு முள்ளுள்ள காய்மணி. அக்கு- அக்கம். முள்ளுண்மையால், அக்கத்திற்குக் கண்மணி முண்மணி யென்றும் பெயர். கள்- முன். கள்ளி - முள்ளி, முட்செடி. கள் + மணி - கண்மணி. முதற்காலத்திற் பனிமலையும் பாண்டி யன் ஆட்சிக்குட் பட்டிருந்ததனால், ஆரியர் வருமுன்னரே, தென்னாட்டுச் சிவநெறியாரும் வடநாட்டு நேபாள அக்கமணி யைத்தொன்று தொட்டு அணிந்து வந்தனர். ச்ச வேட திசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி. என்று சிலப்பதிகாரம் (கக:உக-உ) கூறுதல் காண்க. சிவனை யடைந்தவரின் மும் மாசும் எரிந்து சாம்பலாய் விடு கின்றன என்பதை உணர்த்தற்கே, திருநீறு பூசப்பட்டது. அது பூதி (பிங்.) என்றும் சொல்லப்படும். புழுதி--பூதி-தூள், நீறு, திருநீறு. தேங்கா யுடைத்து அதன் நீரைச் சிந்தி முறியைப் படைப்பது, வழிபடுவோன் தன் தீவினை நினைந்து மனமுடைந்து கண்ணீர் சிந்தித் தூய்மைப்பட வேண்டு மென்பதையும்; வாழைப் பழத்தைப் படைப்பது, அதன் சதைபோல உள்ளம் கனிந்து மென்மையும் இனிமையும் பெற வேண்டு மென்பதையும், குறிப்பாக வுணர்த்தும். சிவன் கோவிற் பூசகர், குருக்கள், பண்டாரம், ஓதுவார், புலவர், போற்றி எனப் பல பெயர் பெற்றனர். மூ வேந்தரும் முதற்கண் சிவனடியாரா யிருந்து, பின்னர் ஆரியர் (பிராமணர்) வந்து முத் திருமேனிக் கொள்கை புகுந்திய பின், இடையிடை ஒரோ வொருவர் மாலியத்தையும் (வைண வத்தையும்) தழுவினர். தம்மைப் போன்றே தாம் வழிபடு தெய்வமும் ஏற்றமாக இருந்து இன்புற வேண்டு மென்று, தமக் குரிய சிறப்பை யெல்லாம் தம் தெய்வத்திற்கும் செய்தனர். அச் சிறப்புக்கள் தெய்வத்தின் ஒப்பிலா வுயர்வு நோக்கிப் பன்மடி யுயர் வாகச் செய்யப்பட்டன. வானளாவும் எழுதிலைக் கூட கோபுரமும் மாட மண்டபங் களும் சுற்று மதிலுங் கொண்ட திருவுண் ணாழிகைத் திருக் கோவில், ஊர்வலத்திற்குச் சிறந்த யானை குதிரை யொட்டக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/60&oldid=1428917" இலிருந்து மீள்விக்கப்பட்டது