பக்கம்:தமிழர் மதம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலை யியல் சரு வெண்காளைகள், குடை கொடி முதலிய சின்னங்கள், கருவூல களஞ்சிய பண்டசாலைகள், பல்வகை அணிகங்கள் (வாகனங் கள்),சப்பரங்கள், விலை யுயர்வும் ஓவிய வேலைப்பாட்டுச் சிறப்பு முள்ள பொன்னாடை பொன்மணி யணிகள், திருக்குளம், பூங்கா, திருப் பள்ளியெழுச்சி யின்னியம், திருமுழுக்காட்டு, திரு வின் னமுது படைப்பு, திருநாள் ஆரவார ஊர்வல உலாக்கள், ஆண்டு தோறும்(முத் தட்டு முதல் எழு தட்டு வரை கொண்ட}தேரோட்ட தெப்பத்தேர்த் திருவிழாக்கள், நில மானிபங்கள், இயவர், காவ லர் ஏவலர் மேற்பார் வலராகிய பணிமக்கள், முதலிய பல் வகைச் சிறப்பும் வேந்தராலும் மன்னராலும் பெருஞ் செல்வராலும் செய் யப்பட்டன. இசையாலும் நடத்தாலும் இறைவனை இன்புறுத்த நால்வகைப்பட்ட எல்லாக் கருவியிசையும் ஆட்டும் பாட்டும் கோவில்களிலும் திருவுலாக்களிலும் நிகழ்ந்தன. இதற் கென்றே பாடகரும் கணிகையரும் நட்டுவரும் முட்டுவரும் அமர்த்தப்பட் டனர். கொண் முடிபு (சித்தாந்தம்) தலைவன் தளையன் தளை என்னும் மூன்றும் தொடக்கமிலா முப்பொருள்கள்.காமம் (காமியம்) வெகுளி (ஆணவம்) மயக் கம் (மாயை) எனத் தளை மூவகைத்து. தெரிந்தும் தெரியாமலும் செய்யும் இருவகைத் தீவினையும் நீக்கி இறைவனை வழிபடின், இல்லறத்தாலும் துறவறத்தாலும் இருபாலாரும் வீடு பெறலாம். வீட்டுலகம் சிவனுலகம் (சிவ வுலகம்) எனப்படும். வீடு பெறும் வரை ஆதன் பிறவிக் கடலுள் அழுந்தும், நிலைத்திணை, நீர்வாழி, ஊரி, பறவை, விலங்கு, மாந்தன், தேவன் எனப் பிறவி எழு வகை. இதுவே சிவக் கொண் முடிபு. அன்னீறும் ஆனீறும் ஒன்றன் பாலையும் உணர்த்தும். எ-டு: தனியன் (தனிப்பாடல்), தடியன் (பூசணிக்காய்), அலவன், மடையான், குண்டடியன், கடுவன். "காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய்.” என்பதில், மும் மாசு குறிக்கப் பட்டிருத்தல் காண்க. (குறள்,௩௯0)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/61&oldid=1428918" இலிருந்து மீள்விக்கப்பட்டது