பக்கம்:தமிழர் மதம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் காமங் கெடுதல் என்பது, இல்லறத்திற்குப் பிறனில் விழை யாமையும் பிறன் பொருள் வெஃகாமையும்; துறவறத்திற்கு. ஆசை அடியோ டொழிதல். சசூ தெரியாது மிதிப்பினும் தீச்சுடுதல் போல, தெரியாது செய் யும் தீவினையும் தீங்கு விளைக்கும் என்பது கொள்கை. நல்வினை யாற் கேடில்லை. "நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்,33 (குறள் . உஉO) "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (ரு) என்பதில், இருவினை யென்றது தெரிந்தும் தெரியாதும் செய்யும் தீவினைகளையே. தசரதன் வேட்டையாடிய போது தெரியாது கொன்ற சிறு வனின் குருடரான பெற்றோர் இட்ட வைவே (சாபமே), பின்னர் இராமனைக் காட்டிற் கேகச் செய்தது என்பது, நடுநிலை யறிஞர் கருத்து, "அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன். (குறள் . சசு) என்பதனால், இல்லறத்தாலும் வீடுபேறுண் டென்பதே தமிழர் கொள்கையாம். "ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை யுடைத்து.33 (குறன்.சஅ) ஆதலால், துறவறத்தான் பொறையினும் இல்லறத்தான் பொறையே பெரிதாம். பேரின்ப வீட்டைப் பெற்றதாகப் பெரிய புராணங் கூறும் சிவனடியாருட் பெரும்பாலார், இல்லறத்தில் நின்றவரே. இருவகை யற வாழ்க்கையையும் இறைவன் ஏற்கின்றான் என்பதை யுணர்த்தற்கே, அவனுக்கு அம்மையப்ப வடிவும் அந்தண வடிவும் குறிக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/62&oldid=1428920" இலிருந்து மீள்விக்கப்பட்டது