பக்கம்:தமிழர் மதம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரு0 விண்ணகர்-விண்ணகரம். பரம பதம் = பரமன் பதிந்திருக்கும் இடம், வீட்டுலகம், திருமாலுலகம். திருமரல் மலரணி தமிழர் மதம் முல்லை நிலத்திற்குரிய துழாய் மாலை. திருமால் ஊர்தி முல்லை நிலத்திற்குரிய கலுழன். கலும்தல் = கலத்தல். கலுழ் - கலுழன் - வெண்டலையும் செவ் வுடம்புமாக இருநிறங் கலந்த பறவை. கலுழன்-வ. கருட (garuda). திருமால் படை சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்னும் ஐந்து. ஐம்படை யுருவாகச் செய்த ஐம்படைத் தாலி யென்னும் அணியை, மத வேறுபாடின்றிச் சிறு பிள்ளைகட்குத் தொன்று தொட்டுக் காப்பாக அணிந்து வந்திருக்கின்றனர். "தாலி களைந்தன்று மிலனே'" "பொன்னுடைத் தாலி யென்மகன்" "அமளித் துஞ்சு மைம்படைத் தாலிக் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர் (புறம்.எஎ). (அகம். ருச). (மணி. எ :ருசு-எ). " அழகிய வைம்படையு மாரமுங் கொண்டு (பெரியாழ். திரு.க.ச:ரு). "ஐம்படை சதங்கை சாத்தி" (பெரிய பு. தடுத்தாட், ச). "தன்படைகளானதிரு வைம்படை தரித்தேர (கலிங். அவ. கூ). தோலி யைம்படை தழுவு மார்பிடை >> (கம்ப.நாடு.ருஅ). "ஐம்படை மார்பிற் காணேன்” (திருவிளை.கூகூ : உரு).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/66&oldid=1428926" இலிருந்து மீள்விக்கப்பட்டது