பக்கம்:தமிழர் மதம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரி நிலை யியல் திருமால் நிலைகள் வானிற் கலுழனூர் தலும், நிலத்தில் நிற்ற லிருத்தல் கிடத் தலும். கிடத்தற்குச் சிறந்த இடம் திருவரங்கம். திருவரங்கம்-வ. ஸ்ரீரங்க. திருமால் தொழில் ருக படைப்பு காப்பு அழிப்பு என்னும் மூன்று. "உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே.33 (கம்ப. சிறப்புப் பா. க) திருமால் வழிபாடு அக்க மாலைக்குத் தலை மாறாகத் துளசிமணி மாலை யணிந்து, திரு நீற்றிற்குத் தலை மாறகத் திரும ண் காப்புச் சாத்தி, 'சிவ போற்றி' என்பதற்குத் தலைமாருக 'மால் போற்றி' அல்லது 'மாய போற்றி' என்று ஓதி, பிறவகைகளி லெல்லாம் சிவனியர் போன்றே செய்து வழிபடல். சிவனிய அரசர் சிவன் கோவில்கட்குச் செய்தது போன்று, மாலிய அரசரும் திருமால் கோவில்கட்குச் சிறப்புச் செய்து மானியம் விட்டனர். இரு சாராருள்ளும் ஒரு சிலர், சமயப் பொது நோக்கரா யிருந்து இரு மதக் கோவில்கட்கும் இயன்றது செய்தனர். திருமால் கோவிற் பூசகர் திருவடி பிடிப்பான், நம்பி எனப் பெயர் பெற்றனர். கொண் முடியு பெரும்பாலும் சிவனியத்தை யொத்ததே. இறைவன் பெய ரும் வீட்டுலகப் பெயரும் சில சொற்களும் மட்டும் வேற்றுமை. மெய்ப் பொருளியல் சிவனியத்தை யொத்ததே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/67&oldid=1428928" இலிருந்து மீள்விக்கப்பட்டது