பக்கம்:தமிழர் மதம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருஉ தமிழர் மதம் சிவனியமும் மாலியமும், எல்லாம் வல்ல இறைவனான் ஒரே தெய்வத்தை வெவ்வேறு பெயரால் வணங்கும் மதங்க ளாதலால், சிவனுந் திருமாலும் வெவ்வேறு தெய்வ மென்றோ, அ வரிடை ஏற்றத் தாழ்வுண் டென்றே, குமரிநாட்டார் கொள்ள வில்லை. "அரியுஞ் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு.3" என்பது பழமொழி. "அரனதிக னுலகளந்த வரியதிக னென்றுரைக்கு மறிவிலோர்க்குப் பரகதிசென் றடைவரிய பரிசேபோற் புகலரிய பண்பிற்றமால்'3 (கம்ப. நாடவிட். உச). என்றார் கம்பர். இரு மதத்தார் பிள்ளை கட்கும் ஐம்படைத்தாலி அணியப்பட்டு வந்ததும், இதை வலியுறுத்தும். முற்காலத்தில், ஆடவரும் பெண்டிர் போன்றே தலைமுடியை நீள வளர்த்துக் கொண்டை முடித்தனர். நோயில்லா நிலையில் முடி வெட்டுவது, அவமானத் தோல்விக்கும் துயரத்திற்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. இறைவன் முன் தம்மைத் தாழ்த்துவதற்கே, தெய்வப் பற்றாளர் திருக்கோவில்கட்குச் சென்று தம் தலையை மழித்துக் கொண்டனர்.அவ் வழக்கம் இன் றும் ஓரளவு இருந்து வருகின்றது. இனி, அடிமைகட்குக் காதில் துளையிடுவது அக்காலத்து வழக்கம். தெய்வப்பற்று மிக்க செல்வரும், தம்மை இறை படிமையராகக் கொண்டு, தம் காதில் துளையிட்டனர். அது தூர்ந்து போகாமைப் பொருட்டே, கடுக்கன் குண்டலம் முதலிய காதணிகளை அணிந்து வந்தனர். மந்திர வெழுத்தும் சக்கரமும் பொறித்த தகட்டை உட் கொண்ட, குளிசம் போன்ற தெய்வக் காப்பான முன்கை யணியே, இன்று காப்பு என வழங்கி வருகின்றது. நாகமும் நாகப்படமும் போன்ற உருவமைந்த எல்லா அணிகளும், தொடக்கத்தில் நாக வணக்கத்தைக் காட்டிய வையே. பண்டை ஐம்படைத்தாலியும் சங்குத்தாலியும் ஆமைத் தாலியும் போன்று, இன்று குறுக்கை (சிலுவை)த் தாலியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/68&oldid=1428929" இலிருந்து மீள்விக்கப்பட்டது